திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவயீந்திரபுரம்
பெயர்:திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:அயிந்தை (திருவயிந்திபுரம்)
மாவட்டம்:கடலூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவநாத சுவாமி, அயக்கிரீவர்
தாயார்:வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி)
தீர்த்தம்:கருடதீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
விமானம்:சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருவஹீந்திபுரம் அல்லது திருவயிந்திபுரம் என்பது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில் கடலூர் மாவட்டம் கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி , அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள திருவந்திபுரம் அருகே ஓடும் கெடிலம் ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி: வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). விமானம்: சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்.திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

நூல்கள் மற்றும் பாடல்கள்[தொகு]

இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பேசுகின்றன.[1]

50 திருமணம் மட்டும்[தொகு]

இங்கு திருமணம் செய்வோர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே வழங்கப்படுவதால் இத்திருத்தலத்தில் சுபமுகூர்த்த நாளில் 50 திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=21200

வெளி இணைப்புகள்[தொகு]