திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில் (Thirumullavaram Maha Vishnu Swamy temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கொல்லம் நகர்புறத்தில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இக்கோயில் கொல்லத்தின் திருமுல்லவாரம் கடற்கரையில் அமைந்துள்ளது.[1]

இந்த இடமானது பரசுராமரால் புனிதப்படுத்தபட்டதாக ஐதீகம் உள்ளது. இந்த கோயிலின் மூலக் கோயில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், அது கடலில் முழ்கிவிட்டதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. இக்கோயிலின் கருவறையில் கிழக்கே பார்த்தபடி மகாவிஷ்ணுவும், மேற்கே பார்த்து சிவபெருமானும் காட்சியள்ளிப்பது சிறப்பு.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.keralatourism.org/destination/thirumullavaram-beach-kollam/251
  2. கேரளா ஒரு சுற்றுலா , நூல், பக்கம்- 154 வீ. கே, பாலன், மதுரா வெளியீடு, சென்னை, திசம்பர் 2005