திருநெட்டூர் மகாதேவர் கோயில்
திருநெட்டூர் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வைட்டிலா கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலில் பரமேஸ்வரா மற்றும் மகா விஷ்ணு ஆகிய இரண்டு முதன்மைத் தெய்வங்கள் இருக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் பரமேஸ்வரர் ருத்ர ரூபமாகவும், மகா விஷ்ணு வைகுண்டேஸ்வரராகவும் உள்ளனர். இரண்டு தெய்வங்களும் கிழக்கு நோக்கி உள்ளன. கேரளாவின் 108 சிவன் கோவில்களில் ஒன்று என்றும், பரசுராம முனிவரால் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்றும் நம்பப்படுகிறது. [1] [2]
கர்க்கடக வாவு
[தொகு]மலையாள மாதமான கர்க்கிடகத்தின் அமாவாசை நாளன்றுஏராளமானோர் மகா விஷ்ணு கோவிலில் தம் முன்னோர்களுக்கு காணிக்கை செலுத்த வருகிறார்கள். [3] இக்கோயில் " கர்க்கடக வாவு "விற்கு மிகவும் புகழ் பெற்றது. அமாவாசை நாளில், பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர்.
கோயில் அமைப்பு
[தொகு]5.5 ஏக்கர் வளாகத்தில் இக்கோயல் அமைந்துள்ளது. சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் திருச்சுற்று, கருவறை உள்ளிட்டவை கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளன. வழிபாட்டுக்கூடம் அழகாக உள்ளது.
விழாக்கள்
[தொகு]தனு மாதத்தில் கொடியாட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எட்டு நாள்கள் நடைபெறும் இவ்விழா ஆராட்டுடன் நிறைவடைகிறது. இரு கோயில்களும் கொடிமரத்தைக் கொண்டுள்ளதால், விழா பொதுவாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியும், அஷ்டமி ரோகிணி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் பிற விழாக்களாகும்.
படத்தொகுப்பு
[தொகு]-
கோயில்
-
கோயில் குளம், கோயில்
-
திருச்சுற்று
-
திருச்சுற்று (மகாதேவர் கோயில்)
-
கோயிலின் முழுத்தோற்றம்