திருக்குடும்பப் பரிகாரக் கோயிலும் பசிலிக்காவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம்
Sagrada Família
Basílica i Temple Expiatori de la Sagrada Família
Basilica and Expiatory Church of the Holy Family
Sagrada Familia 01.jpg
முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பார்சிலோனா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°24′13″N 2°10′28″E / 41.40361°N 2.17444°E / 41.40361; 2.17444ஆள்கூறுகள்: 41°24′13″N 2°10′28″E / 41.40361°N 2.17444°E / 41.40361; 2.17444
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்பார்சிலோனியத் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுநவம்பர் 7, 2010
நிலைMinor basilica
செயற்பாட்டு நிலைஇயக்கத்தில்/முழுமை பெறவில்லை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1969, 1984
தலைமைபேராயர், லூயிஸ் மார்ட்டினெஸ் சிஸ்டாக்
இணையத்
தளம்
www.sagradafamilia.cat
Official name: அந்தோனி கௌடியின் படைப்புகள்
வகை:கலாச்சார
வரையறைகள்:i, ii, iv
கொடுக்கப்பட்ட நாள்:1984[1]
மேற்கோள் எண்.320bis
State Party:எசுப்பானியம்
பகுதி:ஐரோப்பா, வட அமெரிக்கா
Official name: Templo Expiatorio de la Sagrada Familia
Type:நினைவுச் சின்னம்
Designated:24-07-1969
Reference No.(R.I.)-51-0003813-00000[2]

திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் (சக்ராடா பமீலியா, Basílica i Temple Expiatori de la Sagrada Família) என்பது எசுப்பானியாவின், காத்தலோனியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே பார்சிலோனாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கத்தோலிக்க ஆலயம் ஆகும். காத்தலன் கட்டிட வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினால் (1852–1926) இவ்வாலயம் வடிவமைக்கப்பட்டது. இது கட்டிமுடிக்கப்படும் முன்னரே இதனை யுனெஸ்கோ, உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3] இப்பேராலயம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்கால் இளம் பேராளயமாக நேர்ந்தளிக்கப்பட்டது.[4][5][6] இது எசுப்பானியாவின் பன்னிரெண்டு புதையல்களில் ஒன்றாகும்.

கோடி தன்னுடைய இறப்புவரை இவ்வாலயத்திற்காகவே தன்னுடைய நேரங்களைச் செலவிட்டார், எனினும் அவரது இறந்த ஆண்டான 1926 ஆம் ஆண்டன்று ஆலயத்தின் காற்பங்கு கூட கட்டி முடிக்கப்படவில்லை.[7] கோடியின் இறப்புக்குப் பின் பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்தன. எசுப்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 1950 ஆம் ஆண்டுகளில் மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2010 ஆண்டு வரை பாதிக்கும் மேலாக கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு நேர்ந்தளிக்கப்பட்டது, எனினும் கோடியின் நூற்றாண்டு நினைவு தினமன்றே அதாவது 2026 ஆம் ஆண்டிலேயே இது முழுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unesco, Works of Antoni Gaudí". Whc.unesco.org. 7 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Templo Expiatorio de la Sagrada Familia". Patrimonio Historico – Base de datos de bienes inmuebles (Spanish). Ministerio de Cultura. 9 January 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Works of Antoni Gaudi, UNESCO World Heritage Centre, accessed 14-11-2010
  4. Drummer, Alexander (23 July 2010). "Pontiff to Proclaim Gaudí's Church a Basilica". ZENIT. 25 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The Pope Consecrates The Church Of The Sagrada Familia". Vatican City: Vatican Information Service. 7 November 2010. Archived from the original on 11 நவம்பர் 2010. https://www.webcitation.org/5uAAUTwy8?url=http://press.catholica.va/news_services/press/vis/dinamiche/b2_en.htm. பார்த்த நாள்: 11 November 2010. 
  6. Delaney, Sarah (4 March 2010). "Pope to visit Santiago de Compostela, Barcelona in November". Catholic News Service. 22 ஜூலை 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 July 2010 அன்று பார்க்கப்பட்டது.
  7. Minder, Raphael (3 November 2010). "Polishing Gaudi's Unfinished Jewel". The New York Times. http://www.nytimes.com/2010/11/04/arts/04iht-sacred.html?_r=1&scp=1&sq=gaudi%20sagrada%20familia&st=cse. 

மேலும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sagrada Família
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
வெளி ஒளிதங்கள்
Gaudí, Sagrada Família, Smarthistory
Finalization of the Interior (in Catalan), Temple Sagrada Família