திரிவேணி கலா சங்கம்

ஆள்கூறுகள்: 28°37′37″N 77°13′55″E / 28.627°N 77.232°E / 28.627; 77.232
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிவேணி கலா சங்கம்
சுருக்கம்திரிவேணி
உருவாக்கம்1950
நிறுவனர்சுந்தரி கே. ஸ்ரீதரணி
நோக்கம்இசை, நடனம் மற்றும் கலைக் கல்வி
தலைமையகம்205 தான்சேன் மார்க்,
பெங்காலி சந்தை அருகில்,
புதுதில்லி-110001

திரிவேணி கலா சங்கம் (Triveni Kala Sangam) புது தில்லியிலுள்ள ஒரு முக்கியமான கலாச்சார, கலை, கல்வி மையமாகும். [1] [2] 1950ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சுந்தரி கே. ஸ்ரீதரணி, நிறுவன இயக்குநராக இருந்தார். இது நான்கு கலைக்கூடங்கள், ஒரு அரங்கம், வெளிப்புற அரங்கம், திறந்தவெளி சிற்பக்கலைக் கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர அதன் பல்வேறு கலைகளையும் இசை மற்றும் நடன வகுப்புகளையும் இயக்குகிறது. இது மாண்டி ஹவுஸ் வட்டச்சாலை மற்றும் பெங்காலி சந்தைக்கு இடையில் தான்சேன் மார்க்கில் அமைந்துள்ளது. [3]

வரலாறு[தொகு]

தில்லியில் ஒரு நடன நிறுவனத்தைத் தொடங்குவதற்கான யோசனையை 1950ஆம் ஆண்டில் நடனக் கலைஞர் உதய் சங்கரின் முன்னாள் மாணவி சுந்தரி கே. ஸ்ரீதரணி எழுப்பினார். [4] 'திரிவேணி கலா சங்கம்' என்ற பெயர் புல்லாங்குழல் கலைஞரான விஜய் ராகவ் ராவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் "கலைகளின் சங்கமம்" என்பதாகும். கன்னாட்டு பிளேசு, புது தில்லிபுது தில்லியின் கன்னாட்டு பிளேசிலுள்ள]] ஒரு காபி உணவகத்துக்கு மேலே ஒரு அறையில் பிரபல கலைஞர் கே. எஸ். குல்கர்னியின் கீழ் இரண்டு மாணவர்களுடன் இது தொடங்கப்பட்டது. விரைவில் இவரது முயற்சிகள் கவனிக்கப்பட்டன. ஜவகர்லால் நேரு நிறுவனத்திற்கான நிலத்தை ஒதுக்கினார். படிப்படியாக, இவர் ஒரு சிறிய குழுவினரை ஏற்பாடு செய்து, இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். மேலும், நிதியினைச் சேகரித்தார். குரு ராஜ்குமார் சிங்காஜித் சிங் 1954ஆம் ஆண்டில் மணிப்பூர் நடனப் பிரிவின் தலைவராக திரிவேணியில் சேர்ந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டில், 'திரிவேணி பாலே'வை நிறுவினார். அதில் அவர் இயக்குநராகவும், முதன்மை நடனக் கலைஞராகவும் இருந்தார். [5]

கட்டுமானம்[தொகு]

அரை ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கலைக்கூடங்கள், அரங்கம், நூலகம், புகைப்பட அறை, பணியாளர்கள் குடியிருப்பு, வகுப்பறைகள் ஆகியவற்றின் பல்நோக்கு வளாகத்தை வடிவமைக்க ஒரு அமெரிக்க கட்டிடக் கலைஞர் நியமிக்கப்பட்டார். இறுதியாக கட்டுமானம் 1957இல் தொடங்கியது, இறுதியில் மார்ச் 3, 1963இல், தற்போதைய கட்டிடம் திறக்கப்பட்டது. [6]

பிரதான நுழைவாயில் மற்றும் இடதுபுறத்தில் ஸ்ரீதரணி கலைக்கூடத்தின் முகப்பு.

இந்தியாவில் புகழ்பெற்ற அமெரிக்க கட்டிடக் கலைஞரான ஜோசப் ஆலன் ஸ்டீன் (1957-1977) எழுப்பிய முதல் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும் [7] அவர் புது தில்லியில் இந்தியா சர்வதேச மையம், லோதி சாலை, இந்தியா வாழ்விட மையம் போன்ற பல முக்கியமான கட்டிடங்களையும் வடிவமைத்தார். நவீன கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம் அதன் "பலவகை நோக்கங்களுக்காக பல இடங்கள்" மற்றும் ஜாலி வேலைகள் (கல் அலங்காரங்கள்) ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸ்டீனின் தனிச்சிறப்பாக மாறியது. [8] [9]

கலைக் கண்காட்சி[தொகு]

பாரம்பரிய கலைக் கண்காட்சி 1977ஆம் ஆண்டில் பிரபல நாடக ஆளுமையும், நாடக இயக்குனருமான இப்ராஹிம் அல்காசியின் மனைவி ரோஷன் அல்காசி என்பவரால் நிறுவப்பட்டது. [10] இது தில்லி முழுவதும், குறிப்பாக தெற்கு தில்லியில், பல வணிக கலைக்கூடங்கள் திறக்கப்படுவதற்கான ஒரு காலகட்டமாக இருந்தது. அதன்பிறகு திரிவேணி அதன் "வணிகரீதியான" அணுகுமுறையை பராமரிக்க முடிந்தது. [11] ரோஷன் 2007இல் தான் இறக்கும் வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கலைக்கூடத்தை நடத்தி வந்தார் . இன்று இப்ராஹிம் தனது எண்பது வயதுகளில் இருந்தாலும் அதன் இயக்குநராகத் தொடர்கிறார். [12]

உணவகம்[தொகு]

திரிவேணி கலா சங்கத்தில் உள்ள தேயிலை மொட்டை மாடி உணவகம் கலைஞர்கள், மாணவர்கள், அறிஞர்கள் சந்திக்கும் ஒரு பிரபலமான இடமாக மாறியது. குறிப்பாக சிறப்பான உணவுகளுக்கு பெயர் பெற்றது. இது 70கள் மற்றும் 80களில் பிரபலமாக இருந்தது. தில்லி முழுவதும் மற்ற கலை மையங்கள் வரத் தொடங்கியபோதும் இது பிரபலமாகவே இருந்தது. பல ஆண்டுகளாக, திரிவேணி உறுப்பினர் அல்லது நுழைவுச் சீட்டு நிகழ்ச்சிகள் இல்லாத ஒரே பொது நிறுவனமாக இருந்து வருகிறது. [13]

விருது[தொகு]

திரிவேணியின் நிறுவனரும் இயக்குனருமான சுந்தரி கே. ஸ்ரீதரணிக்கு 1992 ல் இந்திய அரசு பத்மசிறீ [14] வழங்கி கௌரவித்தது.

இறப்பு[தொகு]

இவர் 2012 ஏப்ரல் 7 அன்று புதுதில்லியில், தனது 93 வயதில் இறந்தார். இவரது மகன் அமர் ஸ்ரீதரணி திரிவேணியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Art of aesthetics". தி இந்து. 28 August 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article598821.ece. 
  2. "Scholarships: Institutions And Gurus Teaching Indian Dance And Music". ICCR.
  3. "New Delhi Attractions: Triveni Kala Sangam". http://travel.nytimes.com/travel/guides/asia/india/new-delhi/46282/triveni-kala-sangam/attraction-detail.html. 
  4. "Smt Sundari Krishnalal Shridharani". Sangeet Natak Akademi. Archived from the original on 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  5. DR. R.K. Singhajit Singh Profile பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம் Homi Bhabha Fellowship Council, Mumbai, Fellowship:1976-1978.
  6. Rajan, Anjana (28 August 2010). "Art of aesthetics". Chennai, India: தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article598821.ece. Rajan, Anjana (28 August 2010). "Art of aesthetics". Chennai, India: The Hindu.
  7. Architect of Independence. Dwell. November 2008. https://books.google.com/books?id=r8QDAAAAMBAJ&q=Triveni+Kala+Sangam&pg=PA116. 
  8. "Delhi's Architectural Face". Outlook. 18 June 2008. http://www.outlookindia.com/article.aspx?237694. 
  9. "An urban legacy: Joseph Allen Stein, 1912-2001". The South Asian. December 2001.
  10. "Art Galleries in Delhi". Delhi Tourism website. Archived from the original on 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
  11. "Art and Commerce in Delhi". 29 April 2010. http://travel.nytimes.com//2010/05/02/travel/02heads.html. 
  12. "Stage presence : Ebrahim Alkazi". harmony India. Archived from the original on 2011-11-21. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
  13. "Prima donna". The Tribune. 3 September 2000. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  14. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_கலா_சங்கம்&oldid=3558062" இலிருந்து மீள்விக்கப்பட்டது