திரிவெனிக் வெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரிவெனிக் வெலி
Drvenik veliki satelite.png
டிரிவெனிக் வெலியின் செயற்கைக்கோள் படம்
புவியியல்
அமைவிடம்அட்ரியாடிக் கடல்
ஆள்கூறுகள்43°26′39″N 16°08′44″E / 43.444226°N 16.145439°E / 43.444226; 16.145439ஆள்கூறுகள்: 43°26′39″N 16°08′44″E / 43.444226°N 16.145439°E / 43.444226; 16.145439
பரப்பளவு12.07 km2 (4.66 sq mi)
உயர்ந்த ஏற்றம்178 m (584 ft)
நிர்வாகம்
குரொவேசிய மாவட்டங்கள்டால்மேசிய மாவட்டம்
மக்கள்
மக்கள்தொகை150 (2011 கணக்கீட்டின் படி)
Drvenik Veli.

திரிவெனிக் வெலி (Drvenik Veli, Дрвеник-Вели) என்பது ஏதிரியாத்திக்குக் கடலில் குரோவாசிய பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தல்மாசியத் தீவுக்கூட்டத்தின் நடுவே, சோல்ட்டாவின் வடமேற்கே, பெருந்தரையில் இருந்து 1.8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[1] இதன் பரப்பளவு 12.07 சதுரகிமீ ஆகும்.[2][3] இத்தீவின் அதியுயர் புள்ளி 178 மீட்டர்கள் ஆகும்.[3]

இத்தீவின் ஒரேயொரு குடியிருப்பு திரேவ்னிக் விலீக்கி ஆகும், இதன் மக்கள்தொகை 150 (2011 தரவு) ஆகும்.[4] இவர்களின் முக்கிய தொழில்கள் வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா.[5] இத்தீவின் கரையோரங்களில் பல மணல் மற்றும் கூழாங்கல் கடற்கரைகள் உள்ளன.

இந்தத் தீவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டு முதலே மக்கள் வாழ்ந்துவருகின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குரோஷிய ஆவணங்கள், இத்தீவை "கெரோனா" அல்லது "கிருனா" என்று குறிப்பிட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவெனிக்_வெலி&oldid=3511266" இருந்து மீள்விக்கப்பட்டது