திரிப்பையா திரிமூர்த்தி கோயில்
திரிப்பையா திரிமூர்த்தி கோயில் இந்தியாவின் கேரளாவில் திருச்சூரில் இரிஞ்சாலக்குடாவில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். ஒரே கருவறையில் ஒரே பீடத்தில் திரிமூர்த்திகள் வீற்றிருக்கும் பெருமை உடையது இக்கோயிலாகும். இவ்வகையில் உலகின் அரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இடதுபுறத்தில் பிரம்மா, நடுவில் சிவன் மற்றும் வலதுபுறத்தில் விஷ்ணு என்ற வகையில் பரபிரம்மத்தின் (சர்வ வல்லமையுள்ள கடவுள்) மூன்று முதன்மையான அம்சங்களான உருவாக்கம்-அழித்தல்-பாதுகாத்தலைக் குறிக்கும் வகையில் இந்த மூலவர் கருவறை அமைந்துள்ளது. [1]
புராணம்
[தொகு]இரிஞ்சாலக்குடாவில் உள்ள ' கூடல்மாணிக்யம்' கோயிலுக்கு தற்செயலாக மிகவும் கற்றறிந்த நம்பூதிரி ஒருவர் வந்ததாகவும், அவரிடம் விலைமதிப்பற்ற புனித ஓடு இருந்ததாகவும், அதில் கிட்டத்தட்ட அனைத்து தெய்வங்களின் ஆவி அழைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்ததாகவும் புராணம் கூறுகிறது. அவர் இக்கோயில் தெய்வத்தின் ஆவியை அழைக்க முயன்றபோது, அக்கூடானது கீழே விழுந்து துண்டுகளாக உடைந்தது. ஒன்றிணைந்த சக்தியானது மண்டபமாக உருவானதாகக் கூறப்படுகிறது.
அவர் மிகுந்த ஏமாற்றத்துக்கும் சோகத்துக்கும் உள்ளானார். 'கொடுங்களூரம்மா'வைச் சந்திப்பதற்காக அவர் தெற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டபோது வழியில் பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் ஆகியோர் அவர் முன் தோன்றி அவரை ஆசிர்வதித்தனர். அந்த இடம் தெளிந்த நீரைக்கொண்ட ஏரியுள்ள நடவரம்பா என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் 'திருப்பிரிகா' என்று கூறப்பட்ட பெயர் காலப்போக்கில் 'திருப்பையா' என மாற்றம் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shiva, Hindu God, the Destroyer". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.