தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்
17°43′05″N 83°19′47″E / 17.718002°N 83.329812°E
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 8 திசம்பர் 2017 |
---|---|
அமைவிடம் | பாண்டுரங்கபுரம், விசாகப்பட்டினம் |
ஆள்கூற்று | 17°43′05″N 83°19′47″E / 17.718002°N 83.329812°E |
வகை | வானூர்தி அருங்காட்சியகம், போக்குவரத்து அருங்காட்சியகம் |
உரிமையாளர் | விசாகப்பட்டினம் பெருநகர மேம்பாட்டுக் கழக முகமை |
தியு 142 வானூர்தி அருங்காட்சியகம் (TU 142 Aircraft Museum) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தூவுபோல்வ் தியு-142 வானூர்தி ஆகும். விசாகப்பட்டிணம் நகரச் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது திசம்பர் 2017-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.[1]
சேவை
[தொகு]தியு 142 வானூர்தி இந்தியக் கடற்படையில் 29 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளது. இந்த வானுர்தி 29 மார்ச் 2017 அன்று அரக்கோணத்தில் உள்ள ஐ. என். எஸ். ராஜாளியில் படைப்பிரிவிலிருந்து ஓய்வுபெறும் போது 30,000 மணி நேரம் விபத்தில்லாமல் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது.[2]
வானூர்தி அருங்காட்சியகம்
[தொகு]இந்த விமானத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்தது. திட்ட வளர்ச்சிக்கான செலவு சுமார் ₹14 கோடி செலவிட்டது. இதற்கு ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிதியளித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TU 142 Aircraft Museum inaugurated".
- ↑ "TU 142M Aircraft Museum at Visakhapatnam". Indian Navy. Retrieved 2018-10-30.