ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
அரசுத்துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1976 |
வகை | சுற்றுலா, தொகுப்பு சுற்றுலா |
ஆட்சி எல்லை | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
குறிக்கோள் | எல்லாம் செயல்படுத்தக்கூடியதே |
மூல நிறுவனம் | சுற்றுலாத் துறை, ஆந்திரப் பிரதேச அரசு |
வலைத்தளம் | www |
ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Andhra Pradesh Tourism Development Corporation) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு மாநில அரசு நிறுவனம் ஆகும்.
நிறுவன சேவைகள்[தொகு]
ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பாரம்பரியம், இயற்கை, சாகசம், சுகாதாரம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வளமான வரலாற்று மற்றும் இயற்கை பின்னணியைக் குறிக்கும் சுற்றுலாத் தொகுப்புகளைப் பயனாளர்களுக்கு வழங்குகிறது.[1] இந்த சுற்றுலா திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் 8 மையங்களை உள்ளடக்கியது. திருப்பதி, ஹார்ஸ்லி மலைகள், அரக்கு பள்ளத்தாக்கு, விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீசைலம் போன்ற முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இத்துறையின் சார்பில் ஓய்வு விடுதிகள் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 63 மேம்படுத்தப்பட்ட பேருந்துகளும், 29 வால்வோ பேருந்துகள், 8 குளிரூட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பேருந்துகள், 4 பகுதி தூங்கும் வசதியுடைய பேருந்துகள், 11 சிற்றுந்து, 1 கவர்ச்சிகரமான பழமையான வாகனங்கள், 10 குவாலிஸ் என பலதரப்பட்ட வாகனங்கள் சுற்றுலாவிற்காக இத்துறையினால் பயன்படுத்தப்படுகின்றன.
இக்கழகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொழுது போக்குச் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது.[2] பல சாத்தியமான சுற்றுலா வளர்ச்சியினை அடையாளம் கண்டுள்ளது.[3] 2006 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மக்களின் சுற்றுலாத் தேவையினைப் பூர்த்தி செய்யச் சேவை மையம் ஒன்றைத் திறந்துள்ளது.[4]
இலக்கு ஆந்திரப் பிரதேசம்[தொகு]
இந்திய மாநிலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் ஆந்திரா 3வது இடத்தில் உள்ளது. 2013ஆம் ஆண்டில், 152.1 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தனர். இது மொத்த உள்நாட்டுச் சுற்றுலா சந்தையில் 13.3% ஆகும். மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், கடற்கரைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பழமையான வனப் பகுதிகள் உள்ளன. சில குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து புதிய சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் 100% சொகுசு வரி விலக்கு அதிகாரிகளால் வழங்கப்படுகிறது.[5]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chakravorty, Sohini (17 November 2009). "There are more to weekends than malls". Express Buzz. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=There+are+more+to+weekends+than+malls&artid=T4uW79BhozE=&SectionID=xAV59odivTs=&MainSectionID=w44iAeuGCu8=&SectionName=BUzPVSKuYv7MFxnS0yZ7ng==&SEO=Andhra%20Pradesh%20Tourism%20Development%20Corporation.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "APTDC to develop leisure tourism". Business Standard. http://www.business-standard.com/article/beyond-business/aptdc-to-develop-leisure-tourism-105112101032_1.html.
- ↑ "Central funding for AP Tourism projects". The Hindu Business Line. 22 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Andhra Pradesh tourism corporation opens new office". The Hindu. 23 January 2006. Archived from the original on 9 மார்ச் 2007. https://web.archive.org/web/20070309051912/http://www.hindu.com/2006/01/23/stories/2006012317270300.htm.
- ↑ "Focus Sectors in Tourism".