திம்புப் பேச்சுவார்த்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திம்புப் பேச்சுவார்த்தைகள்
இலங்கை இனப்பிரச்சினை
காலம் 1985 யூலை 8-13
ஆகஸ்டு 12-13
இடம் திம்பு பூட்டான்
முடிவு திம்புக் கோட்பாடுகள்
அணிகள்
இலங்கை அரசு ஈழத் தேசிய விடுதலை முன்னணி
தலைவர்கள்
HW ஜயவர்தனா
குழுவினர்
HW ஜயவர்தனா உட்பட 10 பேர் (புலிகள்): அன்ரன்,திலகர்

(ஈ.பி.ஆர்.எல்.எவ்.): வரதராஜா பெருமாள், எல்.கேதிஸ்வரன்,
(டெலோ): சார்ள்ஸ் என்ரனி தாஸ், மோகன்,
(ஈரோஸ்): ராஜி சங்கர், ஈ. இரத்தினசபாபதி,
(புளொட்): வாசுதேவ,தர்மலிங்கம் சித்தார்த்தன்,
(த.ஐ.வி.மு.): சிவசிதம்பரம்,அமிர்தலிங்கம்,சம்பந்தன்

அணுசரனயாளர்
இந்தியா
இரண்டாவது கட்டத்தில் டெலோ குழுவில் மோகனுக்கு பதிலாக நடேசன் சத்தியேந்திரா பங்கேற்றார்.

திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும். இப்பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 8இல் ஆரம்பமாகியது.

இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்கு பற்றிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.