திபாலி பிசுவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபாலி பிசுவாசு
சட்டமன்ற உறுப்பினர் மேற்கு வங்காளம்
பதவியில்
20162021
முன்னையவர்சுசில் சந்திர ராய்
பின்னவர்சின்மாயி தேப் பர்மண்
தொகுதிகசோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஆகத்து 1970 (1970-08-02) (அகவை 53)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2020–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
வேலைஅரசியல்வாதி

திபாலி பிசுவாசு (Dipali Biswas)(பிறப்பு 2 ஆகத்து 1970 [1] ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக கசோல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2016-ல், திரிணாமுல் காங்கிரசுக்கும், 2020-ல் பாரதிய ஜனதா கட்சிக்கும் மாறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கசோல் நகரில் வசிக்கும் ரஞ்சித் பிசுவாசு என்பவரை திபாலி பிசுவாசு மணந்தார்.[3][4] இவர் பர்தங்கா இரகுநாத் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை ஊழியராகப் பணியாற்றினார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2016 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக மேற்கு வங்காளத்தில் உள்ள கசோல் தொகுதியில் போட்டியிட திபாலி பிசுவாசு பரிந்துரைக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் பிசுவாசு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]

2018-ல், பிசுவாசு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[5] பின்னர் 19 திசம்பர் 2020 அன்று, இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elected Members". West Bengal Legislative Assembly.
  2. 2.0 2.1 "West Bangal General Legislative Election 2016". Election Commission of India. Archived from the original on 15 May 2019.
  3. 3.0 3.1 "Dipali Biswas". myneta.info. Association for Democratic Reforms. Archived from the original on 3 April 2017.
  4. "Dipali Biswas Affidavit" (PDF). Election Commission of India]archive-url=https://web.archive.org/web/20201128143756/http://wbsec.gov.in/(S(gff3ziibfgr3us45gswbmw55))/writereaddata/CEOASSEMBLY/Declarations2016/AffidavitRemarks/Dipali%20Biswas%20118062016.pdf. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  5. Sen, Megna (19 December 2020). "Mamata's former aide Suvendu Adhikari joins BJP at Amit Shah's Midnapore rally". Livemint (in ஆங்கிலம்). Archived from the original on 19 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  6. "Suvendu Adhikari ends all speculation, joins BJP, delivers jolt to Mamata and TMC". India Today. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபாலி_பிசுவாசு&oldid=3672779" இலிருந்து மீள்விக்கப்பட்டது