தாராப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாராப்பூர்
Darappur

দরাপপুর
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்7,732
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்nadia.nic.in

தாராப்பூர் (Darappur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாணி உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள சக்தாகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

பாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது[1].

23.067° வடக்கு 88.652° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தாராப்பூர் நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] தாராப்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,732 ஆகும் இம்மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 58% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 66 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 49 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gangopadhyay, Basudev, Paschimbanga Parichay, 2001, (வங்காள மொழியில்), p. 70, Sishu Sahitya Sansad
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராப்பூர்&oldid=2051731" இருந்து மீள்விக்கப்பட்டது