உள்ளடக்கத்துக்குச் செல்

தாப்சன் குதிரைலாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாப்சன் குதிரைலாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. யுனானென்சிசு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு யுனானென்சிசு
தாப்சன், 1872
தாப்சன் குதிரைலாட வெளவால் பரம்பல்

தாப்சன் குதிரைலாட வௌவால் (Dobson's horseshoe bat)(ரைனோலோபசு யுனானென்சிசு) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை வௌவால் சிற்றினம் ஆகும். இது சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

தாப்சன் குதிரைலாட வெளவாலின் முதுகுபுற உரோமங்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றுப்பகுதி உரோமம் இலகுவாகவும் சற்று வெளிர் நிறமாகவும் இருக்கும்.· இளம் வயது வெளவால் சாம்பல் நிறத்தில் காணப்படும். இதனுடைய முன் இறக்கையின் சராசரி நீளம் 56.6mm (54.2-59.5mm) ஆகும்.[2] இந்தச் சிற்றினம் ரை. பியர்சோனியைப் போலக் காணப்பட்டாலும், அளவில் இது பெரியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bates, P.J.J.; Bumrungsri, S.; Csorba, G.; Molur, S.; Srinivasulu, C.; Mao, X.G. (2019). "Rhinolophus yunanensis". IUCN Red List of Threatened Species 2019: e.T19576A21991423. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19576A21991423.en. https://www.iucnredlist.org/species/19576/21991423. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Bates P. J. J. Harrison D. L. . 1997 . Bats Of The Indian Subcontinent . Harrison Zoological Museum , Sevenoaks, Kent, UK, 258 pp. ISBN 0-9517313-1-9
  3. Csorba G. Ujhelyi P. Thomas N. 2003 . Horseshoe Bats of the World . Alana Books, Bishop's Castle , Shropshire, United Kingdom, xxx + 160 pp. ISBN 0-9536049-1-8