தாஜி படவடேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாஜி படவடேகர்
பிறப்பு15 செப்டம்பர் 1921
மும்பை, பம்பாய் மாகாணம், இந்தியா
இறப்பு15 செப்டம்பர் 1921
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
கல்விமும்பை வில்சன் கல்லூரி
பணிநாடக நடிகர், திரைப்பட நடிகர்
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது (1965)
பத்மசிறீ (1967)

கிருஷ்ணசந்திர மோரேசுவர் (Krishnachandra Moreshwar) தனது மேடைப்பெயரான தாஜி படவடேகர் (Daji Bhatawadekar) (15 செப்டம்பர் 1921 - 26 டிசம்பர் 2006), என அறியப்படும் இவர், ஒரு இந்திய நாடக ஆளுமையும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இந்தியாவில் சமசுகிருதம் மற்றும் மராத்தி நாடகங்களின் மறுமலர்ச்சிக்கு இவர் பெருமை சேர்த்தார்.[1] 1965 இல் சங்கீத நாடக அகாதமி விருதை வென்றவர். [2] 1967 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார், சமூகத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [3]

சுயசரிதை[தொகு]

தாஜி படவடேகர் 1921 செப்டம்பர் 15 அன்று பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் பம்பாயில் பிறந்தார். பம்பாயில் உள்ள ஆர்யா கல்விச் சங்கத்தில் பள்ளிப்படிப்பைப் பெற்றார். [4] மும்பை, வில்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும், மும்பை பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். [5] ஒரு அலுவலக வேலையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் நாடகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். மும்பையை தளமாகக் கொண்ட இலக்கிய சங்கமான மும்பை மராத்தி சாகித்ய சங்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். [6]

படவடேகர் பல மராத்தி, சமசுகிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழி நாடகங்களில் நடித்தார். மேலும், துர்கா கோட் போன்ற நடிகர்களுடனும் புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே மற்றும் எர்பர்ட் மார்சல் போன்ற இயக்குனர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். [6] 'மும்பை பிராமண சபா'வுக்காகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். [5] இவர் 78 வெவ்வேறு வேடங்களில் நடித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில பல முறை மேடையேற்றப்பட்டது. [5] தோச்சி ஏக் சமர்த், மித்ரா, ஹீ தார் பிரேமச்சி காரி கம்மத் அஹே, லக்னாச்சி கோஷ்டா, மக்பத் மற்றும் துஜா அஹே துஷ்பாஷி ஆகியவை இவரது நன்கு அறியப்பட்ட நாடகங்களில் சில. [6] [5] விஜேதா (1982) என்ற படத்திலும் நடித்தார். தூர்தர்ஷன் ஒளிபரப்பிய பியோம்கேஷ் பக்ஷி (1993) என்ற தொலைக்காட்சி தொடருக்காக மக்டி கா ராஸ் [7] என்ற தொடரில் நந்த் துலால் பாபு மற்றும் வேனி சன்ஹார் [8] தொடரில் பெனி மாதவ் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஆங்கிலம் மற்றும் சமசுகிருதத்தில் ஒரு அறிஞரான இவர், [6] சமசுகிருத நாடகம் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார், அழகியல் ( ரசம் ) மற்றும் வெளிப்பாடு ( அபிநயா ) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். [5] தனது 70 களிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் . மேலும், 74 வயதில் முனைவர் பட்டம் பெற்றார் [5] நாட்டிய பூசண், கலா குராவ், மகாராஷ்டிர ரத்னா மற்றும் நட சாம்ராட் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். 1965 ஆம் ஆண்டில், சமசுகிருத நாடகத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். [9] இந்திய அரசாங்கம் 1967 இல் பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது [10] இவர் மும்பையில் சார்னி சாலையில் உள்ள படவடேகர் வாடியில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் வசித்து வந்தார். [5] மும்பை மராத்தி சாகித்ய சங்கம் இவர் இறந்த டிசம்பர் 26 ஆம் தேதியை டாக்டர் தாஜி படவடேகர் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கிறது. [11]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Ananda Lal, தொகுப்பாசிரியர் (2004). The Oxford Companion to Indian Theatre. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195644463. http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0077. 
  2. "Sangeet Natak Akademi". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  4. "Daji Bhatwadekar: Timeless performance". சிஃபி. 23 June 2004. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Daji Bhatwadekar: Timeless performance". சிஃபி. 23 June 2004. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015."Daji Bhatwadekar: Timeless performance". Sify. 23 June 2004. Archived from the original on 24 September 2015. Retrieved 9 May 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 "Times of India". Times of India. 29 May 2001. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015."Times of India". Times of India. 29 May 2001. Retrieved 9 May 2015.
  7. Archived at Ghostarchive and the Wayback Machine: "Byomkesh Bakshi: Ep#4- Makdi ka Ras". யூடியூப்.
  8. Archived at Ghostarchive and the Wayback Machine: "Byomkesh Bakshi: Ep#31 - Veni Sanhar". யூடியூப்.
  9. "Sangeet Natak Akademi". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015."Sangeet Natak Akademi". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 31 March 2016. Retrieved 9 May 2015.
  10. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014."Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.
  11. "Mumbai Marathi Sahitya Sangh". Mumbai Marathi Sahitya Sangh. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஜி_படவடேகர்&oldid=3794405" இலிருந்து மீள்விக்கப்பட்டது