தளவாய்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தளவாய்பாளையம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர் 
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்981
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் உள்ள கிராமம் தளவாய்பாளையம் ஆகும்.

விளக்கப்படங்கள்[தொகு]

தளவாய்பாளையத்தில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,  மொத்த மக்கள் தொகை 981.ஆண்கள்-  477 ,  மற்றும் பெண்கள்- 504 . பாலின விகிதம்  1057 இருந்தது. கல்வியறிவு விகிதம்  66.39 ஆக உள்ளது.

சிறப்புகள்[தொகு]

விவசாயம் இவர்களின் குல தொழில் ஆகும்.இந்த கிராமம் முழுவதும் ஒரே சமுதாயம் கள்ளர் சமுதாயம். இராஜ இராஜ சோழன் ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் ஒன்பது வளநாடுகளாக பிரிக்கப்பட்டது.அதில் இராஜேந்திரன் சிங்கவளநாடு ஒன்று. இராஜேந்திரன் சிங்கன் என்பது இராஜ இராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்று.இந்த சிங்க வளநாடு நான்கு கிராமங்களை உள்ளடக்கியது.அதில் தளவாய்பாலையம் ஒன்று.இங்கு மாசி மகம், சித்திரா பௌர்ணமி, பங்குனி உத்திரம் இம்மூன்று விழாக்கள் சிறப்பு மிக்கவை.சிங்கவளநாடு முழுவதும் சேர்ந்து நாட்டு திருவிழா நடத்துவார்கள் .எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on August 29, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளவாய்பாளையம்&oldid=3651045" இலிருந்து மீள்விக்கப்பட்டது