தர்மசாத்திரா தேசிய சட்ட பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மசாத்திரா தேசிய சட்ட பல்கலைக்கழகம்
Dharmashastra National Law University, Jabalpur
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
truth alone triumphs
வகைஇந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள், பொது
உருவாக்கம்2018
வேந்தர்தலைமை நீதிபதி-மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்
துணை வேந்தர்வி. நாகராஜ்
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஇந்திய வழக்குரைஞர் கழகம்
இணையதளம்www.mpdnlu.ac.in

தர்மசாத்திரா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Dharmashastra National Law University, Jabalpur) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அமைந்துள்ள ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகும்.[1] இது 2018-ல் மத்தியப் பிரதேச தர்மசாத்திர தேசிய சட்டப் பல்கலைக்கழக ஆணையால் நிறுவப்பட்டது.[2] 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் இரவி மலிமத் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் வி நாகராஜ் ஆவார்.

கண்ணோட்டம்[தொகு]

தர்மசாத்திரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்மொழியப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு
Dharamshastra National Law University and the University

தர்மசாத்திரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஜபல்பூர் வானூர்தி நிலையத்திற்கு அருகில் 120 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு முடியும் வரை, ஜபல்பூரில் உள்ள ரிட்ஜ் சாலையில் உள்ள பாரத ரத்னா பீம் ராவ் அம்பேத்கர் தொலைத்தொடர்பு பயிற்சி நிறுவனத்தில் இப்பல்கலைக்கழகம் செயல்படும். தர்மசாசுத்திரா தேசிய சட்ட பல்கலைக்கழகம் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மற்றும் ஒரு வருடச் சட்டப் படிப்பு பாடத் திட்டத்தை வழங்குகிறது.[3]

இணைப்புகள்[தொகு]

தர்மசாத்திரா தேசிய சட்ட பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக் குழுவால் மாநில பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]

ஆராய்ச்சி மையங்கள்[தொகு]

  • பன்னாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட ஆய்வு மையம்[5]
  • மாற்றுத் தகராறு தீர்வு மையம்[6]
  • போட்டி சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம்[7]
  • குற்றவியல் நீதி நிர்வாக மையம்[8]
  • சுற்றுச்சூழல் சட்டத்திற்கான மையம்[9]
  • மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கான மையம்[10]

உதவித்தொகை[தொகு]

மத்தியப் பிரதேசம், பிற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித்தொகைகளை இங்குப் பயிலும் மாணவர்கள் பெறுகின்றனர்.[2][1]

சட்ட உதவி மையம் 'விதி மித்ரா'[தொகு]

தர்மசாத்திரா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 18 திசம்பர் 2020 அன்று 'விதி மித்திரா' என்ற சட்ட உதவி மையத்தினை அறிமுகப்படுத்தியது. இது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தனிநபர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. நிதி ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கும் 'அத்யபன்' என்ற திட்டத்தையும் இது அறிமுகப்படுத்தியது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dharmashastra National Law University, Jabalpur" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  2. 2.0 2.1 "About the University" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  3. Shukla, Divya Shakti (7 January 2021). "NLU Jabalpur (DNLU) - Courses, Ranking, Admission, Cutoff, Placement, Fees & Eligibility". பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  4. "UGC recognition". பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
  5. "Centre for studies in Tnternational Trade and Investment Law – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  6. "Centre For Alternative Dispute Resolution – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  7. "Centre for Research in Competition Law and Policy – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  8. "Centre For Criminal Justice Administration – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  9. "Centre For Environmental Law – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  10. "Centre For Research And Studies In Human Rights – Dharmashastra National Law University" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  11. "Dharmashastra National Law University launches legal aid clinic 'Vidhi Mitra'" (in en). https://www.dailypioneer.com/2020/state-editions/dharmashastra-national-law-university-launches-legal-aid-clinic----vidhi-mitra---.html. 

வெளி இணைப்புகள்[தொகு]