இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள் (Autonomous law schools in India) இந்தியாவில் சட்டக் கல்வியின் மேம்பாட்டிற்கும் ஆராய்ச்சிக்கும் நாடு முழுவதும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட 22 சட்டப் பல்கலைகழகங்கள் இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் சட்டப் பல்கலைக்கழகம், இந்திய தேசியச் சட்டப்பள்ளி பெங்களூருவில் 1987இல் துவக்கப்பட்டது. பின்னர் அனைத்து மாநிலங்களிலும் தேசியச் சட்டப் பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்பார்வையிலும், இந்திய வழக்கறிஞர்கள் மன்றத்தின் கட்டுப்பாட்டிலும் இப்பல்கலைக் கழகங்கள் செயல்படுகின்றன. இச்சட்டப் பள்ளிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளும், மூன்றாண்டு இளம் நிலை படிப்புகளும், மற்றும் இரண்டாண்டு முதுநிலை சட்டப் படிப்புகளும், சட்டத்தில் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test) (CLAT) மூலம் மாணவர்கள் இச்சட்டப் பள்ளி பல்கலைக் கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இந்திய அரசின் தேசியச் சட்டப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்[தொகு]

 1. இந்திய தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், பெங்களூரு, கர்நாடகா [1]
 2. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், போபால், மத்தியப் பிரதேசம்[2]
 3. தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (National Academy of Legal Studies and Research (NALSAR), ஹைதராபாத், தெலங்கானா [3]
 4. மேற்கு வங்காள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்[4]
 5. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஜோத்பூர், இராஜஸ்தான்[5]
 6. இதயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ராய்ப்பூர், ஜார்கண்ட் [6]
 7. குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத்[7]
 8. ராஜிவ்காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்டியாலா, பஞ்சாப்[8]
 9. டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைகழகம், லக்னோ, உத்திரப் பிரதேசம்[9]
 10. தேசிய சட்டக் கல்வி பல்கலைக்கழகம், கொச்சி, கேரளம்[10]
 11. சாணக்கியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்னா, பிகார்[11]
 12. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி[12]
 13. தாமோதரம் சஞ்ஜீவய்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் [13]
 14. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், கட்டாக் [14]
 15. தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ராஞ்சி, ஜார்கண்ட்[15]
 16. தேசிய சட்டப்பள்ளி மற்றும் நீதியியல் அகாதமி, கவுகாத்தி, அசாம்[16]
 17. தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி, திருவரங்கம்[17]
 18. டாக்டர். அம்பேத்கார் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சோனிபட், அரியானா.
 19. மகாராஷ்டிர தேசிய சட்டப்பல்கலைக்கழகம், மும்பாய்[18]
 20. மகாராஷ்டிர தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அவுரங்காபாத்[18]
 21. மகாராஷ்டிர தேசிய சட்டப் பல்கலைக்கழகம், நாக்பூர்[18]
 22. உத்தரகாண்ட் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், நைனிடால்[19]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://www.nls.ac.in/
 2. http://www.lawentrance.com/nliu.htm
 3. http://www.nalsar.ac.in/
 4. http://www.nujs.edu/
 5. http://www.nlujodhpur.ac.in/
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-03-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. http://www.gnlu.ac.in/
 8. http://rgnul.ac.in/
 9. http://www.rmlnlu.ac.in/
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. http://www.cnlu.ac.in/
 12. http://www.nludelhi.ac.in/
 13. https://dsnlu.ac.in/
 14. http://www.nluo.ac.in/
 15. http://www.nusrlranchi.ac.in/
 16. http://www.nluassam.ac.in/
 17. http://www.tnnls.in/
 18. 18.0 18.1 18.2 http://bombayhighcourt.nic.in/libweb/acts/Stateact/2014acts/2014.06.PDF
 19. http://timesofindia.indiatimes.com/city/dehradun/Ukhand-to-to-open-its-first-National-Law-University-in-Nainital/articleshow/40285505.cms