தம்பக்சைரிங் அரண்மனை, பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்பக்சைரிங் அரண்மனை
Istana Tampaksiring
Holy Water Temple Ubud, Bali, indonesia - panoramio (9).jpg
இந்து பாலினிய நீர்த்தடாகக் கோயிலை நோக்கி அமைந்துள்ள தம்பக்சைரிங் அரண்மனை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிநவீன கட்டடப்பாணியுடன் பாலினிய கட்டடப்பாணி
இடம்ஜலான் தம்பக்சைரிங், மானுகயா, தம்பக்சைரிங்
கியானியார் பகுதி, பாலி 80552, இந்தோனேசியா
கட்டுமான ஆரம்பம்1957-1963
கட்டுவித்தவர்இந்தோனேசியக் குடியரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ஆர்.எம்.சோதர்சனோ

தம்பக்சைரிங் அரண்மனை (Tampaksiring Palace) (இந்தோனேசியம்: Istana Tampaksiring) இந்தோனேஷியாவில் தம்பக்சைரிங் என்னுமிடத்தில் உள்ள அரண்மனையாகும். இந்தோனேசியாவில் உள்ள ஆறு ஜனாதிபதி அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாலியில் கியானியார் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1957 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட அரண்மனையாகும்.[1] இந்தோனேசியாவில் அமைந்துள்ள பிற ஜனாதிபதி மாளிகைகளைப் போலல்லாமல் இந்த அரண்மனை பெரும்பாலும் டச்சு கிழக்கிந்திய தீவுகளின் காலனித்துவ காலத்திய பாணியைத் தொடர்ந்து வந்ததாகும். தம்பக்சைரிங் அரண்மனை இந்தோனேசியாவின் சுதந்திரம் அடைந்தபின் கட்டப்பட்ட அரண்மனையாகும். இது காலனித்துவ இண்டீஸ் பேரரசின் கட்டடப் பாணியில் கட்டப்பட்டது, இருந்தாலும் அது நவீனத்துவ பாணியும் பாலினிய கட்டிடக்கலைக் கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது.

இந்த வளாகத்தின் கட்டிடங்கள் 19 ஹெக்டேர் பரப்பளவில் பரவிக் காணப்படுகின்றன. முதன்மை அரண்மனை கட்டிடமான தம்பகைசைரிங் சற்று உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அது தீர்த்தா எம்புல் கோயில் எனப்படுகின்ற இந்து பாலினிய நீர்த்தடாகக் கோயில் மற்றும் ஆகூங்க் மலை எனப்படுகின்ற தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலை.ஆகியவற்றை காணும் திசையை நோக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

இந்தோனேசியாவிற்கு ஒரு புதிய ஜனாதிபதி மாளிகையை கட்ட வேண்டும் என்ற எண்ணம் இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி சுகர்னோவால் அவர்களுக்குத் தோன்ற அவரால் அது தொடங்கி வைக்கப்பட்டது. 1950 களின் நடுப்பகுதியில், புதிதாக சுதந்திரமான மாநிலம் என்ற நிலையில், சுகர்னோ இந்தோனேசிய பண்பாட்டை இந்தோனேசியாவிற்கு வருகை தரும் மாநில விருந்தினர்கள் காண்பதற்காகக் கட்ட எண்ணினார். மேலும், பாலிப் பகுதியின் புகழை ஒரு கலாச்சார மற்றும் இயற்கை ஈர்ப்பாகவும் வெளிப்படுத்த விரும்பினார்.   பாலியின் பண்பாட்டு மற்றும் இயற்கை அழகினை வெளி உலகிற்குக் கொணர விரும்பினார். இந்தக் கட்டுமானமானது முக்கியமான தலைவர்கள், மாநில அரச அலுவலர்கள், நாட்டின் தலைவர்கள், அரச தலைவர்கள் அரசாங்கத் தலைவர்கள் ஆகியோர் பாலியில் தங்கும்போது பயன்படும் நோக்கில், அது பொருத்தமானதாக அமையும் என்ற எண்ணத்தில் அமைந்தது.

முன்னதாக அந்த இடத்தில் ஒரு விருந்தினர் மாளிகை இருந்தது. அது பாலியில் இருந்த கியானியார் என்ற இடத்தையாண்ட மன்னருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்த கியானியார் விருந்தினர் மாளிகையில் பெரும்பாலும் வெளிநாட்டு பிரமுகர்கள், விருந்தினர்கள் மற்றும் கிழக்கு தீவுகளின் அலுவலர்கள் ஆகியோர் பயன்பாட்டிற்காக இருந்தது. சுகர்னோ அந்த இடத்திற்கு 1955 ஆம் ஆண்டில் பல முறை வருகை தந்தார். சுகர்னோவின் ஆர்வத்தை அறிந்த, கியானியார் மன்னர் இந்தோனேசியா அரசுக்கு நிலம் மற்றும் கட்டிடத்தை அளித்தார். 1957 ஆம் ஆண்டில் சுகர்னோ ஒரு புதிய அரண்மனைக்கான வடிவத்தைத் தயாரித்து அமைக்க ஆர்.எம்.சோதர்சனோ என்பவரை நியமித்தார். தொடர்ந்து அதற்கான தயாரிப்பு தொடங்கியது. கியானியார் மன்னரின் பழைய விருந்தினர் மாளிகை இடிக்கப்பட்டது. புதிய கட்டுமானப் பணி 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1963 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவு பெற்றது.[4]

பிற அரண்மனைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°24′56″S 115°18′45″E / 8.4156°S 115.3124°E / -8.4156; 115.3124