சாய் தன்சிகா
தோற்றம்
(தன்சிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாய் தன்சிகா | |
|---|---|
2014-இல் தன்சிகா | |
| பிறப்பு | தன்சிகா 20 நவம்பர் 1989 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2006 – தற்போது வரை |
| துணைவர் | விஷால் (2025–தற்போது வரை) |
தன்சிகா (ஆங்கிலம்: Dhansika) (20 நவம்பர் 1989) தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். பேராண்மை திரைப்படத்தில் நடித்ததன்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார்.[1] தஞ்சையில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ் ஆகும்.[2] அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்துள்ளார்.[3] ஒரு சில தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இரண்டு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]மே 2025 இல், சாய் தன்சிகா, யோகி டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் விஷாலுடனான தனது உறவை வெளிப்படையாக அறிவித்தார். மேலும் தாங்கள் ஆகஸ்ட் 29, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.[4][5]
திரைப்படப் பட்டியல்
[தொகு]இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2006 | திருடி | பூங்காவனம் | தமிழ் | அறியப்படாதப் பாத்திரம் |
| 2006 | மனதோடு மழைக்காலம் | கதாநாயகியின் தோழி | தமிழ் | அறியப்படாதப் பாத்திரம் |
| 2009 | பேராண்மை | ஜெனிப்பர் | தமிழ் | |
| 2010 | மாஞ்சா வேலு | அஞ்சலி | தமிழ் | |
| 2010 | நில் கவனி செல்லாதே | ஜோ | தமிழ் | |
| 2012 | அரவான் | வனப்பேச்சி | தமிழ் | மிகத் தைரியமான பாத்திரத்திர்க்காக எடிசன் விருது |
| 2013 | பரதேசி | மரகதம் | தமிழ் | |
| 2013 | யா யா | சீதா | தமிழ் | |
| 2014 | சங்குத்தேவன் | தமிழ் | ||
| 2017 | விழித்திரு | சரோஜா தேவி | தமிழ் |
ஆதாரம்
[தொகு]- ↑ "தன்சிகா பிறப்பு வரலாறு". filmibeat.com. 2014. Retrieved January 1, 2015.
- ↑ வாழ்க்கை வரலாறு – தன்சிகா – யூடியூப்
- ↑ http://m.dinamalar.com/cinema_detail.php?id=63407
- ↑ "Tamil actors Vishal, Sai Dhanshika to get married on August 29". தி இந்து. 19 May 2025. https://www.thehindu.com/entertainment/tamil-actors-vishal-sai-dhanshika-to-get-married-on-august-29/article69595247.ece.
- ↑ "Vishal and Sai Dhanshika announce their official marriage date at 'Yogi Da' audio launch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 May 2025. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishal-and-sai-dhanshika-announce-their-official-marriage-date-at-yogi-da-audio-launch/articleshow/121273743.cms.