உள்ளடக்கத்துக்குச் செல்

தகுதிச் சொல்வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்களையும் சொற்றொடர்களையும் அவற்றின் இயல்பான பொருளிலல்லாமல் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தி வழங்குதல் தகுதிச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள்

[தொகு]

இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை.

இடக்கர் அடக்கல்

இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல்.

எ.கா.:

மலம் கழுவுதலை கால் கழுவுதல் என்றல்
மங்கல வழக்கு

வருத்தமும் அச்சமும் தரும் சொற்களைத் தவிர்த்து அவற்றினிடத்தில் நயம் தரும் சொற்களைத் தகுதியாக்கிச் சொல்லுதல்.

எ.கா.:

ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்கு மாற்றாக மறைந்துவிட்டார் அல்லது துஞ்சினார் என்றல்.
குழூஉக் குறி

ஒரு துறையினரோ, வேறு குழுவினரோ தங்களுக்குள் சில சொற்களைத் தகுதியாக்கி வேறு பொருள் தருமாறு பயன்படுத்துதல்.

எ.கா.:

சாராயம் குடிப்பதை தண்ணீர் அடித்தல் என்றல், யானைப்பாகர் ஆடையைக் 'காரை' என்றல்

நன்னூல் பாடல்

[தொகு]

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • மணிவாசகன், அடியன் (நவம்பர் 2007). தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். pp. 183–184.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகுதிச்_சொல்வழக்கு&oldid=1351561" இலிருந்து மீள்விக்கப்பட்டது