குழூஉக்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழூஉக்குறி என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளும் படியாகப் பயன்படுத்தும் சொற்கள் ஆகும். இது தகுதிச் சொல் வழக்கின் மூவகைகளுள் ஒன்று. மங்கலம் மற்றும் இடக்கர் அடக்கல் இதர இரண்டாகும். யானைப் பாகர்கள், விவசாயிகள், வணிகர்கள், கலைஞர்கள், தமிழ் மருத்துவர் முதலியோர் பேசும் சில சொற்கள் அத்துறை சார்ந்தோருக்கே புரியும்.

தமிழ்க் குழூஉக்குறிகளின் தனித்தன்மை[தொகு]

தமிழ்க் குழூஉக்குறிகள் யாவும் தூய தமிழாகவே இருக்கும். மற்ற திராவிட மொழிகளிலோ அது பெரும்பாலும் சமசுகிருதமாக இருக்கும். இது மற்ற திராவிட மொழிகளைப் ‌போலன்றி தமிழுக்குரிய தனிச்சிறப்பு ஆகும். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. There is yet another important difference between Tamil and other Dravdiian literary languages: the metalanguage of Tamil has always been Tamil, never Sanskrit. As A. K. Ramanujan says (in Language and Modernization, p. 31)
  2. In most Indian langauges the technical gobbledygook is Sanskrit; in Tamil, the gobbledygook is ultra-Tamil". (K. Zvelebil, pg. 4, Smile of Murugan on Tamil lit. of S. India).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழூஉக்குறி&oldid=2225240" இலிருந்து மீள்விக்கப்பட்டது