உள்ளடக்கத்துக்குச் செல்

டையசுடெர்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையசுடெர்கசு
டையசுடெர்கசு சின்குலேட்டசு, காயெங் கிராசன் தேசியப் பூங்கா, தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமீப்பிடிரா
குடும்பம்:
பைரகோகாரிடே
பேரினம்:
டையசுடெர்கசு

மெனிவில்லே 1831[1]
சிற்றினம்

உரையினைப் பார்க்கவும்

டையசுடெர்கசு (Dysdercus) என்பது பரவலாகக் காணப்படும் பைரகோகாரிடே குடும்பத்தினைச் சார்ந்த பேரினமாகும். இப்பேரினத்தினைச் சார்ந்த பூச்சிகளில் பல பருத்திக் காய்களை உண்பதால், இவை பருத்திக்கறை பூச்சி என அழைக்கப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

இக்குடும்ப பூச்சிகள் லைகேயினி குடும்ப பூச்சிகளுடன் இனம் காண்பதில் குழம்பிக்கொள்ளக்கூடும், ஆனால் தனித்த கண்கள் இல்லாத காரணத்தால் இவற்றை வேறுபடுத்தி அறியலாம். தலையும் மார்பும் சந்திக்கும் இடத்திலும் மார்பு பகுதியில் பக்கங்களிலும், பெரும்பாலும் அடிவயிற்றிலும் காணப்படும் வெள்ளை அடையாளம் மூலம் ஏனைய பேரினங்களிடமிருந்து டையசுடெர்கசு உடனடியாக வேறுபடுத்தி அறியலாம்.

சிற்றினங்கள்[தொகு]

பயோலிப் டையசுடெர்கசு சிற்றினங்களைப் பட்டியலிட்டுள்ளது.[1] இதன் அடிப்படையில் டையடுடெர்கசு துணைப் பேரினத்தின் கீழ் 12 சிற்றினங்களும், லெப்டாப்த்தல்மசு துணைப் பேரினத்தின் கீழ் 2 சிற்றினங்களும், பாராடையசுடெர்கசு துணைப் பேரினத்தின்கீழ் 5 சிற்றினங்களும், சரியாக வகைப்படுத்தப்படாத 38 சிற்றினங்களும் டையசுடெர்கசு பேரினத்தின் கீழ் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "BioLib.cz: Genus Dysdercus Guérin-Méneville, 1831". biolib.cz. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையசுடெர்கசு&oldid=3129853" இலிருந்து மீள்விக்கப்பட்டது