உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் பிங்கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் எட்வின் பிங்கிரி
பிறப்பு(1933-01-02)சனவரி 2, 1933
நியூ ஹெவன், கனெடிகட்,
இறப்புநவம்பர் 11, 2005(2005-11-11) (அகவை 72)
பிராவிடென்ஸ், றோட் தீவு, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்விப் பணி
துறைஅறிவியல் வரலாறு
கல்வி நிலையங்கள்பிரௌன் பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்

டேவிட் எட்வின் பிங்கிரி (David Edwin Pingree (பிறப்பு:2 சனவரி 1933-இறப்பு:11 நவம்பர் 2005), பண்டைய உலகின் கணிதவியல் வரலாற்று அறிஞர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் பிரௌன் பல்கலைழக்க்கழகத்தில் பண்டைய உலகின் கணிதவியல் மற்றும் வானியல் வரலாற்றுப் பேரராசிரியாக பணியாற்றியவர். [1]பண்டைய கிரேக்க வானியல் நூலின் சமசுகிருத வடிவமான யவன ஜாதகம் எனும் சோதிட நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்கு மிகவும் அறியப்பட்டவர்

வாழ்க்கை

[தொகு]

1960ம் ஆண்டில் டேவிட் பிங்கிரி, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் எலனியக் கால கிரேக்க சோதிடம் இந்தியாவில் அறிமுகப்பட்டது என்ற ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.[2] பின்னர் கீழை நாடுகளின் படிப்பிற்காக சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இணை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டேவிட் எட்வின் பிங்கிரி 1971ல் பிரௌன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் வரலாற்றுப் பேரராசிரியாக இறக்கும் வரை பணியில் இருந்தார்.[3]

எழுதிய குறிப்பிடத்தக்க நூல்கள்

[தொகு]
  • 1970: Census of the Exact Sciences in Sanskrit
  • 1976: Dorothei Sidonii carmen astrologicum
  • 1978: The Yavanajātaka of Sphujidhvaja (2 volumes)[4][5]
  • 1986:Vettii Valentis Antiocheni Anthologiarum Libri Novem (Teubner, Leipzig).
  • 1997: (edited with Charles Burnett) The Liber Aristotilis of Hugo of Santalla, Warburg Institute Surveys and Texts 26, London
  • 2002: (with Takanori Kusuba) Arabic Astronomy in Sanskrit: Al-Birjandī on Tadhkira II, Chapter 11 and its Sanskrit Translation, Brill, Leiden
  • 2005: (with Erica Reiner) Babylonian Planetary Omens, Brill, Leiden

மேற்கோள்கள்

[தொகு]
  1. "In Memoriam" Mathematical Association of America
  2. கணித மரபியல் திட்டத்தில் David Pingree
  3. "A brief history of the Department ", Wilbour Hall
  4. Dhavale, D. G. (1984). "The Yavanajataka of Sphujidhvaja by David Pingree". Annals of the Bhandarkar Oriental Research Institute 65 (1/4): 266–267. 
  5. Rocher, Ludo (March 1980). "The Yavanajataka of Sphujidhvaja by David Pingree". Isis 71 (1): 173–174. doi:10.1086/352443. 

வெள் இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பிங்கிரி&oldid=3793249" இலிருந்து மீள்விக்கப்பட்டது