டேனிலோ சபோலோட்னி
Appearance
டேனிலோ கைரிலோவிச் சபோலோட்னி | |
---|---|
இயற்பெயர் | Дани́ло Кири́лович Заболо́тний |
பிறப்பு | சோபோடர்கா (தற்போது Zabolotne (Q4182521), வின்னிட்சியா ஒப்லாஸ்ட், உக்ரைன்)[1] | திசம்பர் 28, 1866
இறப்பு | திசம்பர் 15, 1929 கீவ்[1] | (அகவை 62)
Resting place | Zabolotne (Q4182521), வின்னிட்சியா ஒப்லாஸ்ட், உக்ரைன்[1] |
துறை | நோய்ப்பரவலியல் |
அறியப்படுவது | பொது உடல்நலவியல் ஆய்வு |
டேனிலோ கைரிலோவிச் சபோலோட்னி ( ஆங்கில மொழி: Danylo Kyrylovych Zabolotny; உக்ரைனியன்: Дани́ло Кири́лович Заболо́тний; 1866 - 1929) ஒரு உக்ரேனிய நோய்ப்பரவலியலாளர் ஆவார். இவர் உலகின் முதல் தொற்றுநோயியல் ஆராய்ச்சித் துறையை நிறுவியவர் ஆவார். 1927 ஆம் ஆண்டில், இவர் தனது துறையில் நோய்ப்பரவலியல் அடிப்படைகள் (Fundamentals of Epidemiology) என்ற முதல் நூல்களில் ஒன்றை வெளியிட்டார். வாந்திபேதி, டிஃப்தீரியா, இரத்தக்கழிசல், பிளேக் நோய், சிபிலிசு மற்றும் டைஃபஸ் போன்ற பல தொற்று நோய்களை குறித்து இவர் ஆய்வுகளை மேற்கொண்டார். மூன்றாவது பிளேக் நோயின் போது இவர் இந்தியா, அரேபியா, மங்கோலியா மற்றும் சீனாவில் நிகழ்ந்த ஆராய்ச்சி பணிகளுக்கு இவர் வழிநடத்தினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Danylo Kyrylovych Zabolotnyi. Famous figures by Ukrainian origin in world civilization (ukrainci.top). I. H. Skrypal. Institute of Encyclopedic Research, National Academy of Sciences of Ukraine. 2022.