டென்மார்க் நீரிணை
(டென்மார்க் ஜலசந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
டென்மார்க் நீரிணை (டேனிய மொழி:Danmarksstrædet; ஐசுலாந்து மொழி: Grænlandssund) வடமேற்கில் கிரீன்லாந்திற்கும் தென்கிழக்கில் ஐஸ்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நீரிணை. இது ஆர்க்டிக் பெருங்கடலின் நீட்டிப்பான கிரீன்லாந்து கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கிறது. 480 கி.மீ நீளமும் குறைந்த பட்சம் 290 கி.மீ அகலமும், குறைந்த பட்சம் 191 மீ ஆளமும் உடையது. குளிர்ந்த கிழக்கு கிரீன்லாந்து நீரோட்டம் இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இங்கு பல முக்கிய மீன்பிடி தளங்கள் அமைந்துள்ளன