டி. ஆர். சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிஆர்எஸ் என்று பிரபலமாக அறியப்படும் பேராசிரியர் டி. ஆர். சுப்பிரமணியம் (T. R. Subramaniam) (20 செப்டம்பர் 1929 - 4 அக்டோபர் 2013) பாரம்பரிய கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் வழக்கத்திற்கு மாறான மற்றும் ஜனரஞ்சகமான உத்திகளை, குறிப்பாக பல்லவியில், இசையமைப்பின் உன்னதமான தன்மையில் சமரசம் செய்து கொள்ளாமல் பாடினார். ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் புதிய வழிகளை ஆராய்வதில் இவரது விருப்பத்திற்காக பிரபலமானார். இவரது இசை நிகழ்ச்சிகள் மிகவும் விரும்பப்பட்டன. ஆசிரியராகவும் இவர் மிகவும் நேசிக்கப்பட்டார். இசையில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஆரம்ப நாட்களும் கல்வியும்[தொகு]

சுப்ரமணியம் ஒரு பெரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஏழு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர். இவரது தந்தை, ராசகோபால ஐயர், இந்தியன் மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்து, அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். கருநாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்த அவர், அடிக்கடி இசைக்கலைஞர்களை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்தார். மதுரை மணி ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் போன்ற பிரமுகர்கள் இவர்களது இல்லத்திற்கு வந்து இசைக்கச்சேரிகளை நிகழ்த்தினர். தந்தையின் மாற்றத்தக்க வேலையின் காரணமாக, பிள்ளைகள் மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் பள்ளிப்படிப்பைப் பெற்றனர். சுப்ரமணியம் மாயவரத்தில் பூச்சி சீனிவாச ஐயங்காரின் சீடரான சிவராம ஐயரிடம் கற்றுக்கொண்டார். திருநெல்வேலியில், ஏ. டி. ராசகோபால ஐயர் மற்றும் பெருங்குளம் 'கவை' சீதாராம பாகவதர் ஆகியோர் இவரது ஆசிரியர்கள். இவரது மூத்த சகோதரி ராதாவும் வீட்டிலேயே படித்தார்.[1]

இவருக்கு சுமார் 19 வயதாக இருந்தபோது, மெட்ராஸ் அகாடமியில் நடந்த பாடல் போட்டியில் சுப்ரமணியம் தனது பாணியில் பாடி முதல் இடத்தைப் பெற்றார். எந்த ராகத்திலும் தாளத்திலும் தனனால் பாடமுடியும் என்று நடுவர்களிடம் கூறியதையடுத்து மிகவும் சிக்கலான சங்கீர்ண நடை தாளமான முகரி ராகத்தில் பாடும்படி நடுவர்கள் கேட்டுக் கொண்டனர். குறையில்லாமல் பாடி, முதலிடம் பெற்றார்.[2]

இவர் பன்மொழிப் புலமையாளர். தியாகராஜர் இயற்றிய கிருதிகளைப் பாடும்போது தெலுங்கில் இவரது புலமை பயனுள்ளதாக இருந்தது.

விருதுகள்[தொகு]

சென்னை, மியூசிக் அகாதெமி இவருக்கு கலா ஆச்சார்யா என்ற பட்டம் அளித்தது.[3]

சான்றுகள்[தொகு]

  1. R, Swaminathan. "An adventurer and a reformer". Sruti Magazine.
  2. "Carnatic TRS passes away". The Hindu. 5 October 2013. https://www.thehindu.com/features/friday-review//carnatic--trs-passes-away/article5201759.ece. பார்த்த நாள்: 26 July 2020. 
  3. "Experts Advisory Committee, Madras Music Academy". Madras Music Academy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._சுப்ரமணியம்&oldid=3800457" இலிருந்து மீள்விக்கப்பட்டது