டிரையெத்தில் பாசுப்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரையெத்தில் பாசுப்பேட்டு
| |
வேறு பெயர்கள்
Triethylphosphate; Tris(ethyl) phosphate; Triethoxyphosphine oxide
| |
இனங்காட்டிகள் | |
78-40-0 | |
Abbreviations | TEP, Et3PO4 |
ChEBI | CHEBI:45927 |
ChemSpider | 6287 |
DrugBank | DB03347 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6535 |
| |
பண்புகள் | |
C6H15O4P | |
வாய்ப்பாட்டு எடை | 182.15 கி/மோல் |
அடர்த்தி | 1.072 கி/செ.மீ3 |
உருகுநிலை | −56.5 °C (−69.7 °F; 216.7 K) |
கொதிநிலை | 215 °C (419 °F; 488 K) |
கலக்கும் | |
-125.3•10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 107 °C (225 °F; 380 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிரையெத்தில் பாசுப்பேட்டு (Triethyl phosphate) என்பது (C2H5)3PO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். பாசுபாரிக் அமிலம் மற்றும் எத்தனாலின் மூவெசுத்தராக இது வகைப்படுத்தப்படுகிறது. எனவே இதை பாசுபாரிக் அமில டிரையெத்தில் எசுத்தர் என்று அழைக்க இயலும். அசிட்டிக் நீரிலி தயாரிப்பில் தொழில் சார்ந்த வினையூக்கியாக, பலபடி பிசின் சீர்திருத்தியாக, நெகிழியாக்கியாகப் (உதாரணம்:நிறைவுறா பாலியெசுத்தர்) பயன்படுவது இச்சேர்மத்தின் முதன்மையான பயனாகும். சிறிய தொழில்களில் இச்சேர்மம் ஒரு கரைப்பானாகப் பயன்படுகிறது. செல்லுலோசு அசிட்டேட்டு, தீச்சுடர் ஒடுக்கி, பூச்சிக் கொல்லிகள் மற்றும் பிற வேதிப்பொருட்கள் தயாரிப்பில் இடைநிலை விளைபொருள், பெராக்சைடுகளுக்கான நிலைநிறுத்தி, வினைல் பலபடி, நிறைவுறாபாலியெசுத்தர் உள்ளிட்ட நெகிழிகள் மற்றும் இரப்பருக்கான வலிமையூட்டும் முகவர் போன்ற பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்[2]. பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பில் டிரையெத்தில் பாசுப்பேட்டு ஒரு இடைநிலைப் பொருளாகத் தோன்றுகிறது.
வரலாறு
[தொகு]19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரெஞ்சு வேதியியலாளர் யீன் லூயிசு லாசாக்னே என்பவரிச்சேர்மத்தைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zhangjiagang Shunchang Chemical Co., Ltd". Triethylphosphate. Archived from the original on திசம்பர் 17, 2004. பார்க்கப்பட்ட நாள் June 13, 2009.
- ↑ Triethylphosphate, International Programme on Chemical Safety