டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி
(சிதியன் ஆடு, போரோமெட்ஸ், போராமெட்ஸ் மற்றும் போரானெட்ஸ்சு,)
டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி
குழுதாவரம்
பிரதேசம்நடு ஆசியா
வாழ்விடம்காடுகள்
17 ஆம் நூற்றாண்டின் ஒரு விளக்கப்படத்தில் காய்கறி ஆட்டுக்குட்டி

டார்ட்டரியின் காய்கறி ஆட்டுக்குட்டி ( Vegetable Lamb of Tartary)[1]) என்பது நடு ஆசியாவின் ஒரு தொன்மையான விலங்கு-தாவரம் ஆகும். இது ஒரு காலத்தில் அதன் பழங்கள் செம்மறியாடுகளாக வளர்வதாக நம்பப்பட்டது. செம்மறி ஆடுகள் ஒரு தொப்புள்கொடி மூல்ம் தாவரத்துடன் இணைக்கப்பட்டு, செடியைச் சுற்றியுள்ள நிலத்தில் மேய்ந்ததாக நம்பப்பட்டது. ஆடு மேய்ந்த நிலங்கள் அனைத்தும் பசுமையாக இல்லாத காரணத்தால், செடி மற்றும் செம்மறியாடு இரண்டும் இறந்தன.

சிசிலியை நோர்மானியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு வடக்கு ஐரோப்பாவில் அறியப்படாத பருத்தி செடிதான் புராணக்கதையில் கூறப்படுகிறது.

சிறப்பியல்புகள்[தொகு]

ஆங்கில பல்துறை அறிஞரும் மற்றும் பல்வேறு படைப்புகளை எழுதியவருமான தாமஸ் பிரவுனின் 1646 இல் வெளிவந்த சூடோடாக்ஸியா எபிடெமிகா என்ற படைப்பு இதற்கு போரமேஸ் என்று பெயரிட்டது.[2]

ஆங்கில எழுத்தாளர் எஃப்ரைம் சேம்பர்சு என்பவரின் படைப்பான சைக்ளோபீடியாவில், ஆக்னஸ் சித்திகஸ் ஒரு வகையான விலங்கு தாவரம் என விவரிக்கப்பட்டது, இது டார்டரியில் வளரும் என்று கூறப்பட்டது. இது ஆட்டுக்குட்டியின் உருவம் மற்றும் அமைப்பை ஒத்திருக்கிறது. இது ஆக்னஸ் வெஜிடபிலிஸ், அக்னஸ் டார்டாரிகஸ் என்றும் அழைக்கப்பட்டது. மேலும், போரோமெட்ஸ், போராமெட்ஸ் மற்றும் போரானெட்ஸ் என்ற பொதுவான பெயர்களையும் கொண்டிருந்தது.[3]

ஆங்கில இயற்கை ஆர்வலரும் மற்றும் எழுத்தாளருமான ஹென்றி லீ தனது தி வெஜிடபிள் லாம்ப் ஆஃப் டார்ட்டரி (1887) என்ற புத்தகத்தில், தொன்மையானழம் ஆட்டுக்குட்டியை ஒரு உண்மையான விலங்கு மற்றும் உயிருள்ள தாவரம் என்று நம்புவதாக விவரிக்கிறார். இருப்பினும், சில எழுத்தாளர்கள் ஆட்டுக்குட்டி முலாம்பழம் போன்ற விதைகளிலிருந்து முளைக்கும் ஒரு செடியின் பழம் என்று நம்பினர் என்றும் அவர் கூறுகிறார். மற்றவர்கள், ஆட்டுக்குட்டி தாவரத்தின் உயிருள்ள உறுப்பு என்று நம்பினர். அது அதிலிருந்து பிரிந்தவுடன் அழிந்துவிடும் எனவும் நம்பினர். காய்கறி ஆட்டுக்குட்டிக்கு சாதாரண ஆட்டுக்குட்டியைப் போலவே இரத்தம், எலும்புகள் மற்றும் சதை இருப்பதாக நம்பப்பட்டது. இது ஒரு தொப்புள் கொடியைப் போன்ற ஒரு தண்டு மூலம் பூமியுடன் இணைக்கப்பட்டது. அது ஆட்டுக்குட்டியை தரையிலிருந்து மேலே தாங்கி நின்றது. தண்டு கீழ்நோக்கி வளைந்து, ஆட்டுக்குட்டி அதைச் சுற்றியுள்ள புல் மற்றும் தாவரங்களை உண்ண அனுமதிக்கிறது. கைக்கு எட்டிய தூரத்தில் உள்ள செடிகளை சாப்பிட்டவுடன், ஆட்டுக்குட்டி இறந்து போய்விடும். இறந்த ஆட்டுக்குட்டியை உண்ணலாம், இறந்தவுடன், அதன் இரத்தம் தேன் போல இனிமையாக இருக்கும். அதன் கம்பளி அதன் தாயகத்தின் பூர்வீக மக்களால் தலை மறைப்புகள் மற்றும் பிற ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தாவர ஆட்டுக்குட்டியால் (மனிதர்களைத் தவிர) ஈர்க்கப்பட்ட ஒரே மாமிச விலங்குகள் ஓநாய்கள் மட்டுமே.[4]

சாத்தியமான தோற்றம்[தொகு]

ஜான் மாண்டெவில்லின் பருத்தியின் கற்பனையான சித்தரிப்பு, செடியில் பருத்திக்குப் பதிலாக செம்மறி ஆடுகளைக் கொண்டுள்ளது.
காய்கறி ஆட்டுக்குட்டியின் மாதிரியின் எடுத்துக்காட்டு, ஹேன்ஸ் ஸ்லோன் 1698 இல் வெளியிட்ட தனது “தத்துவ பரிவர்த்தனைகள்”, தொகுதி 20 இல் வெளியிடப்பட்ட கடிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிரேக்க வரலாற்றாசிரியர் செடசியசு, இந்தியாவில் உள்ள மரங்களைப் பற்றி இவ்வாறு எழுதினார்: "அதன் பழம் செம்மறி ஆடுகளின் அழகிலும் நன்மையிலும் சிறந்த கம்பளியாக இருக்கிறது. பழங்குடியினர் தங்கள் ஆடைகளை இந்த மரக் கம்பளியில் செய்கிறார்கள்." [5]

கி.பி 436 ஆம் ஆண்டிலேயே யூத நாட்டுப்புறக் கதைகளில் இதேபோன்ற யெடுவா என்ற தாவர-விலங்கு பற்றிய குறிப்பு உள்ளது. இந்த உயிரினம், ஆட்டுக்குட்டி வடிவில் இருந்தது. ஒரு தண்டுடன் இணைக்கப்பட்டு பூமியிலிருந்து முளைத்தது. யெடுவாவை வேட்டையாடச் சென்றவர்கள் அம்புகள் அல்லது ஈட்டிகளால் அதன் தண்டிலிருந்து பிரித்து மட்டுமே அதை அறுவடை செய்ய முடியும். விலங்கு துண்டிக்கப்பட்டவுடன், அது இறந்துவிட்டது, அதன் எலும்புகள் சோதிட மற்றும் தீர்க்கதரிசன விழாக்களில் பயன்படுத்தப்படலாம்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vegetable Lamb of Tartary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.