உள்ளடக்கத்துக்குச் செல்

சைக்ளோப்பீடியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஃவ்ரெய்ம் சேம்பர்சு (Ephraim Chambers) சைக்ளோப்பீடியா (1728) ("Cyclopaedia" (1728))
முக்கோணவியல்தலைப்பில் உள்ள உள்ளடக்கம், 1728 சைக்ளோப்பீடியா

சைக்ளோப்பீடியா அல்லது கலைகள் அறிவியல்களின் உலகப்பொது அகராதி (ஃவோலியோ அளவு இருதொகுதி) (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences) என்னும் கலைக்களஞ்சியம் இலண்டனில் உள்ள [எஃவ்ரெய்ம் சேம்பர்சு]](Ephraim Chambers) என்பாரால் 1728 இல் வெளியிடப்பட்டு, 18 ஆவது நூற்றாண்டில் பல பதிப்புகளாக வெளிவந்தது. இந்த சைக்ளோப்பீடியா ஆங்கில மொழியில் முதன் முதல் வெளிவந்த பொது கலைக்களஞ்சியங்களில் ஒன்று.

1728 இல் வெளிவந்த நூலின் துணைத் தலைப்பில் ஆசிரியரின் குறிக்கோள்களின் சுருக்கம் தரப்பட்டுளது:

Cyclopaedia, or, A universal dictionary of arts and sciences: containing the definitions of the terms, and accounts of the things signify'd thereby, in the several arts, both liberal and mechanical, and the several sciences, human and divine: the figures, kinds, properties, productions, preparations, and uses, of things natural and artificial; the rise, progress, and state of things ecclesiastical, civil, military, and commercial: with the several systems, sects, opinions, &c; among philosophers, divines, mathematicians, physicians, antiquaries, criticks, &c: The whole intended as a course of ancient and modern learning.

குறிப்பிடத்தகுந்த அமைப்புகள்

[தொகு]

முதல் பதிப்பின் குறிப்பிடத்தகுந்த அமைப்புகளில் சில: பிரித்தானிய அரசர் சியார்ச் II (George II) அவர்களுக்கு காணிக்கையாக இட்ட குறிப்பு; சான்றுகோள்கள் தந்திருப்பது; முன்னுரையில் தொகுப்பாளர் எழுத்தின் திட்டத்தை விளக்கி இருத்தல்; சேம்பர்சு சிதறிக் கிடக்கும் பல்வேறு கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளுடன் இணைக்கும் முகமாக முறைசெய்த சுட்டிகள் தந்திருத்தல். சேம்பர்சு தன் முன்னுரையில் அறிவுத்தொகுதியின் 47 பகுப்புகளையும் அவற்றிற்கான கட்டுரைகளையும், அவற்றை என்ன வரிசையில் படிக்க வேண்டும் என்பதனையும் குறித்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ளோப்பீடியா_(நூல்)&oldid=1725508" இலிருந்து மீள்விக்கப்பட்டது