டான்சி நிலபேர வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான்சி நிலபேர வழக்கு
ஜெ.ஜெயலலிதா
அமைவிடம்சென்னை
பங்கேற்றோர்ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா,
தண்டனைஅதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், குற்றவியல் சதி
தீர்ப்பு
உயர் நீதிமன்றம்: அனைவருக்கும் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை
விசாரணை நீதிமன்றம்: ஜெயலலிதா, சசிகலா விடுதலை
வழக்கு11 ஆண்டுகள்

டான்சி நிலபேர வழக்கு (அல்லது டான்சி ஊழல் வழக்கு) (TANSI land acquisition case) என்பது 1991-96 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ஜெ. ஜெயலலிதாவுக்கு எதிரான ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி வி. கே. சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த, ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களானது, 1992 ஆம் ஆண்டில் மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (டான்சி) நிலங்களை வாங்கியது. இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தாக்கல் செய்தார். மேலும், 1996 இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கத்தின் ஆட்சியியன் போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். இதில் அவருக்கு 2000 அக்டோபர் 9 அன்று இரண்டு ஆண்டு கடுஞ் சிறைத்தண்டனையும், ரூ 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்பின் காரணமாக 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட காரணமான இந்த வழக்கு அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் அவர் முதல்வராக பதவியேற்றார். இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பர் 2001 இல் தகுதி நீக்கம் செய்தது, இதன் விளைவாக அவர் பதவி விலகினார். மேலும் சசிகலா பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக ஆக்கினார். ஜெ. ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்வித்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டார், அவரும் தன் பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கோடு,2001 திசம்பர் 4, அன்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவையும் மற்ற ஐந்து குற்றவாளிகளையும் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2003 நவம்பர் 24 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 2002 மார்ச்சில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து 2002 தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

பின்னணி[தொகு]

ஜெயலலிதா ஜெயராம் (பிப்ரவரி 24, 1948-5 டிசம்பர் 2016), பொதுவாக ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படுபவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆறு முறை தமிழக முதல்வராக 24 ஜூன் 1991 - 12 மே 1996, 14 மே 2001 - 21 செப்டம்பர் 2001, 2 மார்ச் 2002 - 12 மே 2006, 16 மே 2011 - 27 செப்டம்பர் 2014, 23 மே 2015 - 22 மே 2016, 23 மே 2016 - 5 டிசம்பர் 2016 இருந்தவர். ஜெயலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் நிறுவனங்களான ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகியவை 1992 ஆம் ஆண்டில் மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (டான்சி) நிலங்களை வாங்கின. இந்த நிறுவனங்கள் டான்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் (1.2 ஹெக்டேர்) நிலம் மற்றும் கட்டிடத்தை வாங்கின, இந்த சொத்தை சந்தை மதிப்பு விலையை விட ரூ 35 கோடி குறைவான விலைக்கு வாங்கப்பட்டது.[1] 1996 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இவர்கள் இந்த சொத்தை வாங்கியவகையில் டான்சி நிறுவனத்துக்கு ரூ 28 2.28 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும், அரசு கருவூலத்திற்கு ரூ 58.8 லட்சம் இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.[2]

வழக்கு[தொகு]

இது குறித்த வழக்கை சென்னை விசாரணை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மற்ற ஐந்து பேருக்கும் எதிராக ஜூன் 10, 1999 அன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. 13 சனவரி 2000 அன்று சென்னை நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தது, ஆனால் மாநில அரசு தாக்கல் செய்த விடுப்பு மனுவின் அடிப்படையில், விசாரணையை எதிர்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தால் குற்ற சதித்திட்டம் தீட்டியதாக ஜெயலலிதாவுக்கு, டாச்சி தொடர்பான இரண்டு வழக்குகளிலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 13 (2) மற்றும் 13 பிரிவுகளின் 120-பி (குற்றச் சதி தண்டனை) மற்றும் 409 (அரசு ஊழியர் அல்லது வங்கியாளர், வணிகர் அல்லது முகவர் ஆகியோரின் நம்பிக்கை துரோகத்துக்காக) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. (1) (சி) மற்றும் (ஈ) ஊழல் தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ). முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர், அதாவது டான்சி முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி. ஆர். சீனிவாசன், முன்னாள் ஊரக கைத்தொழில் துறை அமைச்சர் முகமது ஆசிப், முன்னாள் சிறப்பு துணை ஆட்சியர் (முத்திரைகள்) எஸ். நாகராஜன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கூடுதல் செயலாளர் ஆர். கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோருக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆறு பேருக்கும் சசி எண்டர்பிரைசஸ் வழக்கிலும் இதே பொன்ற தண்டனை வழங்கப்பட்டது.[3] 2000 நவம்பரில், சென்னை நீதிமன்றம் இந்த தண்டனையை நிறுத்திவைத்தது. என்றாலும் 2001 இல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதுக்கு தடையாக இந்த தீர்ப்பு அமைந்தது.[2]

அரசியல் தாக்கங்கள்[தொகு]

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்த நில பேரத்தில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இருப்பது தெரிகிறது. நடத்தை விதிகளையும் அவர் மீறியுள்ளார். ஆனால் இதை இந்திய தண்டணைச் சட்டத்தின்படி குற்றமாக கருத முடியாது. மேலும் இந்த நில பேரத்தில் ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் அளவுக்கு சட்டபூர்வ ஆதாரங்கள் இல்லை. பத்திரத்தில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல என்று மறுக்கும் அளவுக்கு ஜெயலலிதா போய்விட்டார். முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் இருக்க மிகுந்த நேர்மை வேண்டும். பதவியின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் சரியான நிர்வாகத்தை நடத்த முடியும். இந்த வழக்கில் ஜெயலலிதா தன் மனசாட்சியை ஒரு முறை நினைத்து பார்க்கவேண்டும். செய்த தவறுக்கு உரிய பரிகாரம் தேடவேண்டும். இந்த நிலபேரத்தில் ஜெயலலிதாவை நேரடியாக தொடர்புபடுத்தும் சாட்சியம் இல்லை. ஆனாலும் டான்சி நிலத்தை நிபந்தனையின்றி மீண்டும் அரசிடமே ஒப்படைக்கவேண்டும்.

~ உச்ச நீதிமன்ற தீர்ப்பு, 24 நவம்பர் 2003[4]

அதிமுக கட்சி 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்றது, ஜெயலிதா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்றபோதிலும், அவர் முதல்வராக பதவியேற்றார். தண்டனை பெற்ற நபர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கே. வேணுகோபால் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு வழக்கறிஞராகவும், வெங்கடபதி அரசு வழக்கறிஞராகவும் செயல்பட்டார். வழக்கை விசாரிக்க அரசு வழக்கறிஞர் மேலும் அவகாசம் கோரியபோது, ​​நீதிமன்றம் வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் சென்றது. கே. வேணுகோபால், ஜெயலலிதா முதல்வராக தொடவதில் எந்தவிதமான முறையற்ற தன்மையும் இல்லை என்று வாதிட்டார், ஏனெனில் இது மக்களின் தீர்ப்பு என்பதால் அவர் முதலமைச்சராக விரும்பினார் என்று வாதிட்டார். 2001  செப்டம்பர் 21 அன்று, உச்சநீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆயம், தேர்தலில் போட்டியியட தகுதியற்ற ஒருவர் முதல்வர் பதவியில் இருக்க முடியாது என்று உத்தரவிட்து. மக்கள் ஆணை என்றாலும் அது அரசியலமைப்பை மீற முடியாது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.[5] ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவித்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டார். 2001 சூலை 1 அன்று அவர் மத்திய அரசால் பதவி நீக்கப்படுவதற்கு முன்னர் அவர் ராஜினாமா செய்தார், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது, அப்போது அண்டை மாநிலமான ஆந்திரத்தின் ஆளுநராக இருந்த சி. ரங்கராஜனுக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[6]

ஜெயலலிதா முதலமைச்சர் பதவியியல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து. இந்தப் பதவிக்கு அடுத்து நியமிக்கப்பட உள்ளது குறித்து பல்வேறு ஊகங்களை ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் தெளிவான பெயர்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனையடுத்து, அதிமுக சட்டம்ன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

2001 திசம்பர் 4, அன்று, சென்னை உயர் நீதிமன்றம் டான்சி நில பேரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவித்தது. இதன் பிறகு இவர் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றார். கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக கட்சி வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரமணிய சுவாமியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலபேரத்தில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் உள்ளது தெரிகறது என்றாலும், அவரது குற்றத்தை நிரூபிக்க எந்த சட்ட ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பளித்து 2003 நவம்பர் 24 அன்று இரண்டு வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை மீண்டும் விடுவித்தது. மேலும் நீதிபதி "இந்த வழக்கின் தனது மனசாட்சியை ஒரு முறை ஜெயலலிதா நினைத்துப்பாரக்கவேண்டும் செயத தவறுக்கு உரிய பரிகாரம் தேடவேண்டும்" என்றும் உத்தரவிட்டார்.[8][2] டான்சி நிலத்தை நிபந்தனையின்றி மீண்டும் அரசிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டதனால் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைத்தார்.[9]

பின்விளைவுகள்[தொகு]

ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து 2002 தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆனார்.[10] இவருக்கு எதிராக திமுக அரசு தாக்கல் செய்த மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கின் முடிவுகளும் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக கட்சிகளுக்கு இடையே அரசியல் சண்டையை ஏற்படுத்தியதாக அரசியல்வாதிகள் நம்புகின்றனர். பதவியேற்ற பின்னர், இதற்கு முன்னர் 1996 - 2001 முதல் பதவியில் இருந்த திமுக அரசின் அமைச்சர்கள் மீது ஜெயலலிதா அரசு ஊழல் வழக்குகளை பதிவு செய்தது.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Verdict on Jayalalithaa Disproportionate Assets Case Postponed to 27 September". Chennai: Mint. 16 September 2014. Archived from the original on 1 March 2016. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015 – via HighBeam Research.
  2. 2.0 2.1 2.2 Singh, Onkar (24 November 2003). "SC acquits Jaya in Tansi land deal case". Rediff. http://ia.rediff.com/news/2003/nov/24sc.htm. பார்த்த நாள்: 1 January 2014. 
  3. T.S., Subramanaian (27 October 2000). Jail term for Jayalalitha. 17. Frontline. http://www.frontline.in/static/html/fl1721/17210040.htm. பார்த்த நாள்: 1 January 2014. 
  4. Nagaraj, Vijay K. (2008). "Revisiting impunity and criminality". in Kannabiran, Kalpana; Singh, Ranbir. Challenging The Rules(s) of Law: Colonialism, Criminology and Human Rights in India. Sage Publications Inc. பக். 327–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780761936657. https://books.google.com/books?id=EaMGo6zqzNYC&pg=PA327&dq=tansi+case&hl=en&sa=X&ved=0CEIQ6AEwB2oVChMI1YjxycXsyAIVUeljCh03dA5u#v=onepage&q=tansi%20case&f=false. 
  5. "Jayalalithaa's chances recede as Supreme Court takes a tough stand". Chennai: India Abroad. 14 September 2001. Archived from the original on 9 April 2016. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015 – via HighBeam Research.
  6. Khare, Harish (2 July 2001). "T.N. Governor resigns before recall". New Delhi: The Hindu இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020321133338/http://thehindu.com/thehindu/2001/07/02/stories/01020001.htm. பார்த்த நாள்: 31 October 2015. 
  7. "Disproportionate assets case aftermath: New Chief Minister". All India: NDTV. 28 September 2014. http://www.ndtv.com/article/india/o-panneerselvam-is-tamil-nadu-s-new-chief-minister-599069. பார்த்த நாள்: 28 September 2014. 
  8. "Jayalalitha acquited [sic] in Tansi land scam case". Press Trust of India (The Economic Times). 24 November 2003. http://articles.economictimes.indiatimes.com/2003-11-24/news/27520980_1_tansi-jaya-publications-acquited. பார்த்த நாள்: 1 January 2014. 
  9. S., Murari (28 September 2014). "Amma Mia: Political Vacuum in TN". Chennai: DNA, Sunday இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160301135043/https://www.highbeam.com/doc/1P3-3445203401.html. பார்த்த நாள்: 31 October 2015. 
  10. "Jayalalitha files nomination papers from Andipatti constituency". Newswire (New Delhi: Hindustan Times). 15 April 2006 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160409233844/https://www.highbeam.com/doc/1P3-1021448661.html. பார்த்த நாள்: 31 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்சி_நிலபேர_வழக்கு&oldid=3892505" இலிருந்து மீள்விக்கப்பட்டது