டாங்ஸ் தர்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாங்ஸ் தர்பார் என்பது ( Dangs Darbar ) என்பது இந்தியாவின் குசராத்தின் டாங் மாவட்டத்தின் தலைமையகமான ஆக்வாவில் ஹோலி பண்டிகையின் போது ஏற்பாடு செய்யப்படும் ஒரு கண்காட்சியாகும். ஐந்து பழைய டாங் தர்பாரில் கலந்துகொள்பவர்களுக்கு அரசாங்கத்தால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. டாங் பகுதியில் பாரம்பரியமாக நடைபெறும் டாங் தர்பாரில், பழங்குடியின மக்கள் தங்கள் நடனம் மற்றும் இசையை நிகழ்த்துவர். இது ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.[1]

நடைபெறும் நாள்[தொகு]

தர்பாரானது ஒவ்வொரு ஆண்டும் ஹோலியுடன் மூன்று நாள் கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படுகிறாது.

நடமெறும் இடம்[தொகு]

இந்தியாவின் சபுதாரா மலைப்பகுதியில் அமைந்துள்ள குசராத்தின் டாங் மாவட்டத்திலுள்ள ஆக்வா என்ற இடத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[2]

வரலாறு[தொகு]

டாங் பகுதியில் ஹோலி ஒரு முக்கியமான பண்டிகை. மாவட்ட நிர்வாகம் 1942 ஆம் ஆண்டு வரை மன்னர்கள் மற்றும் தலைவர்களால் ஆளப்பட்டது. அதே ஆண்டில் மாவட்டத்தின் வனப் பகுதிகள் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பில் மன்னர்கள் மற்றும் தலைவர்களுக்கு குத்தகை உரிமையாகவும், பின்னர் வருடாந்திர வாடகை வடிவில் பில் மன்னர்கள், தலைவர்கள், அவர்களது நண்பர்கள், காவல் துறை அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள் ஆகியோருக்கு டாங் தர்பாரில் கலந்து கொள்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தொகை வழங்கப்பட்டது.

தர்பார் நாளில், பழங்குடியினர் நாக தேவதையை ( பாம்பு தெய்வம் ) வழிபட கங்கைக்குச் செல்கிறார்கள். ஒரு புராணத்தின் படி, இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள தண்டகாரண்ய வனப்பகுதியாக இருக்கலாம். [3]

முக்கியத்துவம்[தொகு]

ஆக்வாவைச் சேர்ந்த பல பழங்குடியினர் அரசவையில் கூடி தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொண்டனர். இந்த நடைமுறை இன்றும் நடந்து வருகிறது. ஆனால் இன்று டாங் பழங்குடி மன்னர் அமர்ந்திருந்தாலும் குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவரே நிவர்த்தி செய்கிறார். [4] இது மாவட்ட அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படுகிறது. [5]

பழங்குடியினரின் நடனங்கள் இந்த திருவிழாவின் முக்கிய ஈர்ப்பாகும். பல்வேறு குழுக்கள் தங்கள் நடனம், கருவி மற்றும் இசைக் கலைகளை வழங்குகின்றன. மேலும், கஹாலியா மற்றும் தாட்பூர் போன்ற கருவிகளைக் கொண்டு இசையை நிகழ்த்துகின்றன. இத்திருவிழாவில் பழங்குடியின கலாச்சாரத்தை ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இரசிகர்கள் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நாளில், பழங்குடியினர் ஹோலி தீயை ஏற்றி, அங்குள்ள சமூகத்தின் மீது வண்ணத் தண்ணீரை தெளிப்பார்கள். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vyas, Rajni (2012). ગુજરાતની અસ્મિતા (5th ). Ahmedabad: Akshar Publication. பக். 14. 
  2. ગુજરાતના લોકોત્સવો અને મેળા. 
  3. ગુજરાતની અસ્મિતા. Vyas, Rajni (2012). ગુજરાતની અસ્મિતા (5th ed.). Ahmedabad: Akshar Publication. p. 14.
  4. Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. Gandhinagar: Directorate of Information/ GujaratState. பக். 54–55. Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. Gandhinagar: Directorate of Information/ GujaratState. pp. 54–55.
  5. 5.0 5.1 Sedani, Hasutaben Shashikant (2015). ગુજરાતની લોકસંસ્કૃતિ. Ahmedabad: University Granth Nirman Board - Gujarat. பக். 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:97-89-381265-97-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்ஸ்_தர்பார்&oldid=3673300" இலிருந்து மீள்விக்கப்பட்டது