டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr. B. R. Ambedkar
இயக்கம்Sharan Kumar Kabbur
தயாரிப்புVishnukanth B. J.
திரைக்கதைSharan Kumar Kabbur
இசைAbhiman
நடிப்புVishnukanth B. J.
Tara
Bhavya
ஒளிப்பதிவுRenuka Aradhya
படத்தொகுப்புM. N. Swamy
வெளியீடு30 திசம்பர் 2005 (2005-12-30)
ஓட்டம்119 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் (Dr. B. R. Ambedkar) என்ற கன்னட திரைப்படம், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பி.ஆர் . என்று சுருக்கமாக அழைக்கப்படும் அம்பேத்கார், இந்திய சமூக சீர்திருத்தவாதியும், சட்டத்திறனாளியும், கல்வியியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் பிறந்தது முதல் இறப்பு வரையிலான காலகட்டத்தை இத்திரைப்படம் உள்ளடக்கியுள்ளது. நடிகை தாரா அம்பேத்கரின் முதல் மனைவியாகவும், ரமாபாய் அம்பேத்கராகவும், நடிகை பவ்யா அவரது இரண்டாவது மனைவியான சவிதா அம்பேத்கராகவும் நடிக்கின்றனர். இப்படத்தை ஷரன் குமார் கப்பர் இயக்குகிறார்.

நடிகர்கள்[தொகு]

  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கராக விஷ்ணுகாந்த் பிஜே
  • சவிதா அம்பேத்கராக பவ்யா
  • ராமாபாயாக தாரா
  • சி. அஸ்வத்
  • தத்தாத்ரேயா
  • பத்மா வசந்தி
  • ராஜேஸ்வரி
  • எம்.என்.சுவாமி
  • அம்மானாபுர
  • பல்லக்கி ராதாகிருஷ்ணா
  • டாக்டர் புருஷோத்தம்
  • குருராஜ் ஹோசகோட்
  • பிராதார்
  • சிவகுமார் ஆராத்யா
  • ராஜசேகர்
  • மாஸ்டர் மனு
  • மாஸ்டர் சந்தீப்
  • மாஸ்டர் பரத்
  • மாஸ்டர் ராம்பிரசாத்
  • மாஸ்டர் குருபிரசாத்

விருதுகள்[தொகு]

  • கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் 2005–06 [1]
  • சிறந்த ஆண் பின்னணிக் குரல் கலைஞர் - ரவீந்திரநாத்
  • நடுவர் மன்றத்தின் சிறப்பு விருது

பாடல்கள்[தொகு]

அனைத்து பாடல்களையும் அபிமான் இசையமைத்துள்ளார் மற்றும் சித்தலிங்கய்யா, கோதுரி மற்றும் விஷ்ணுகாந்த் எழுதியுள்ளனர்.

வரிசை பாடல் பாடகர்கள்
1 "ஜோ ஜோ" நந்திதா
2 "பாரம்மா ராமா" நந்திதா
3 "ராம நாமவு" அபிமான்
4 "கூலிலேட்" சங்கர் ஷான்பாக்
5 "நாடா நடுவினிந்தா" குருமூர்த்தி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka State Film Awards 2005-06". பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2024.