சித்தலிங்கையா (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தலிங்கையா
தொழில் கவிஞர், நாடக ஆசிரியர், தலித் இயக்கவாதி, சட்டமன்ற உறுப்பினர்
நாடு இந்தியர்
கல்வி கன்னட மொழியில் முனைவர் பட்டம்
கல்வி நிலையம் பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
இயக்கம் தலித்-பந்தயா இயக்கம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Holemadigara Haadu, 1975

கவிஞர் சித்தலிங்கையா (Siddalingaiah, பிறப்பு: 1954) இவர் கன்னட மொழிக் கவிஞரும், தலித் இயக்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னட தலித்பந்தயா இயக்கத்தில் பங்குபெற்று, தலித் மக்களுக்காக எழுதத் தொடங்கினார். இவர் பி.கிருசுனப்பாவுடன் இணைந்து தலித் சங்கர்சு சமித் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டில் தனது 34ஆம் அகவையில் கர்நாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2006 முதல் 2008 வரை மாநில அமைச்சர் தகுதிக்கு இணையான கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

இவர் காம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், கன்னடமொழித்துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். தலித் இயக்கத்தின் முக்கிய தலைவரும் அறிஞரும் கவிஞரும் ஆவார்.[1].

நூற்பட்டியல்[தொகு]

  1. கொல்மாடிகாரா காடு (கொலயா, மாடிகா பாடல்கள், 1975)
  2. சாவிராரு நடிகலு (ஆயிரம் நதிகள், 1979)
  3. கப்பு காடினா காடு (கருப்பு வனத்தின் கவிதைகள், 1982)
  4. ஆய்டா கவிதெகலு (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்,1997)
  5. மேராவனிகே (ஊர்வலம்,2000)
  6. நன்ன சனகலு மட்டு இதர கவிதெகலு (என் மக்களும் பிற கவிதைகளும் 2005)
  7. ஊருகேரி (ஆத்மகதனா, 2005)
  8. ஊருகேரி 2 (ஆத்மகதனா, 2006)
  9. ஊருகேரி- சுயசரிதம் (சாகித்ய அகாடமி, 2003)

மேற்கோள்கள்[தொகு]

  1. Satyanarayana and Tharu (2013). From those Stubs Steel Nibs are Sprouting: New Dalit Writing from South India Vol II. New Delhi: Harper Collins India. பக். 151–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5029-376-8.