உள்ளடக்கத்துக்குச் செல்

ஞா. கிருஷ்ணபிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. கிருஷ்ணபிள்ளை
G. Krishnapillai
மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2004
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ("Gnanamuttu Krishnapillai") (வெள்ளிமலை) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கிருஷ்ணபிள்ளை 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 20,675 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1] 2004, 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை. 2012 மாகானசபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[2] சில நாட்களின் பின்னர் கிருஷ்ணபிள்ளை உட்படக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர வற்புறுத்தப்பட்டார்கள். ஆனாலும், எவரும் சேரவில்லை.[3] கிருஷ்ணபிள்ளை 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  2. "Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  3. ஜெயராஜ், டி. பி. எஸ். (14 செப்டம்பர் 2012). "Military Intelligence Operatives 'Pressure' TNA Eastern Councillors Into Supporting UPFA Administration". dbsjeyaraj.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞா._கிருஷ்ணபிள்ளை&oldid=3711134" இலிருந்து மீள்விக்கப்பட்டது