ஜேக்கப் கிரிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேக்கப் கிரிம்
பிறப்புஜேக்கப் லுட்விக் கார்ல் கிரிம்
(1785-01-04)4 சனவரி 1785
ஹனாவ், ஹெஸ்ஸே-காசெல், புனித உரோமைப் பேரரசு
இறப்பு20 செப்டம்பர் 1863(1863-09-20) (அகவை 78)
பெர்லின், புருசிய இராச்சியம், ஜெர்மன் கூட்டமைப்பு
தாக்கம்

ஜேக்கப் லுட்விக் கார்ல் கிரிம் ( Jacob Ludwig Karl Grimm ) (4 ஜனவரி 1785 - 20 செப்டம்பர் 1863), லுட்விக் கார்ல் என்றும் அழைக்கப்படும் இவர், ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழியியலாளரும், தத்துவவியலாளரும், சட்ட நிபுணரும், நாட்டுப்புறவியலாளரும் ஆவார். இவர் கிரிம்மின் மொழியியல் விதியைக் கண்டுபிடித்தவர். ஜெர்மன் மொழியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான அகராதியான டியூட்ச்செஸ் வோர்ட்டர்பட்ச் என்பதின் இணை ஆசிரியரும் கிரிம்சின் விசித்திரக்கதைகளின் ஆசிரியராகவும் அறியப்படுகிறார். மேலும் கிரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இரட்டையர்களில் வில்ஹெல்ம் கிரிம்மின் மூத்த சகோதரரும் ஆவார்.

வாழ்க்கை மற்றும் புத்தகங்கள்[தொகு]

ஜேக்கப் கிரிம் ஜனவரி 4, 1785, [2] ஹெஸ்ஸே-காசெலில் உள்ள ஹனாவில் பிறந்தார். இவரது தந்தை, பிலிப் கிரிம், ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் ஜேக்கப் குழந்தையாக இருந்தபோது இறந்து போனார். மேலும் இவரது தாயார் டோரோதியா மிகவும் குறைந்த வருமானத்துடன் இருந்தார். இவரது சகோதரி ஹெஸ்சேவில் ஒரு பிரபுக்களின் அரண்மனையில் பணிபுரிந்தார். அவர் குடும்பத்தை ஆதரிக்கவும் ஜேக்கப் கல்வி கற்பதற்கும் உதவினார். ஜேக்கப் தனது இளைய சகோதரர் வில்ஹெல்முடன் 1798 இல் காசெலில் உள்ள பொதுப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

1802 ஆம் ஆண்டில், இவர் மார்பர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு சட்டம் பயின்றார். இது இவரது தந்தையின் நோக்கமாக இருந்தது. இவரது சகோதரர் ஒரு வருடம் கழித்து மார்பர்கில் சேர்ந்தார். [3]

வான் சாவிக்னியுடனான சந்திப்பு[தொகு]

ஜேக்கப் கிரிம், ரோமானிய சட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணரான பிரெட்ரிக் கார்ல் வான் சாவிக்னியின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டார்; வில்ஹெல்ம் கிரிம், ஜெர்மன் இலக்கணப் புத்தகத்தின் முன்னுரையில், சகோதரர்களுக்கு அறிவியல் பற்றிய விழிப்புணர்வை வழங்கியதாக சாவிக்னி பாராட்டினார். சவிக்னியின் விரிவுரைகள் ஜேக்கப்பில் வரலாற்று மற்றும் பழங்கால விசாரணையின் மீதான ஆர்வத்தை எழுப்பின, இது இவரது அனைத்து வேலைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. சவிக்னியின் நூலகத்தில்தான் கிரிம் முதன்முதலில் போட்மரின் நடுத்தர உயர் ஜெர்மன் மின்னிசிங்கர்களின் பதிப்பையும் பிற ஆரம்பகால நூல்களையும் பார்த்தார். இது இவருக்கு அவர்களின் மொழியைப் படிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது. [3]

ஜேக்கப் கிரிம்மின் பணி ஜெர்மனி மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய இவரது கருத்துக்களுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. விசித்திரக் கதைகள் மற்றும் மொழியியல் ஆகிய இரண்டிலும் இவரது பணி நாட்டின் தோற்றத்தைக் கையாள்கிறது. இவர் ஒரு ஐக்கிய ஜெர்மனியை விரும்பினார். மேலும், தனது சகோதரரைப் போலவே, அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் பொது உரிமைகளுக்கான லிபரல் இயக்கத்தை ஆதரித்தார். [4] 1848 ஜெர்மன் புரட்சியில், இவர் பிராங்பேர்ட் தேசிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1863 இல் அமெரிக்கத் தத்துவ சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]

இறப்பு[தொகு]

ஜேக்கப் கிரிம் 20 செப்டம்பர் 1863 அன்று ஜெர்மனியின் பெர்லினில் தனது 78வது வயதில் இயற்கையாக இறந்தார் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hadumod Bussmann, Routledge Dictionary of Language and Linguistics, Routledge, 1996, p. 85.
  2. "UPI Almanac for Friday, Jan. 4, 2019". United Press International. 4 January 2019. https://www.upi.com/Top_News/2019/01/04/UPI-Almanac-for-Friday-Jan-4-2019/5471546221584/. "German folklore/fairy tale collector Jacob Grimm in 1785" 
  3. 3.0 3.1  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Sweet, Henry (1911). "Grimm, Jacob Ludwig Carl". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 12. Cambridge University Press. 600–602. 
  4. Zipes, Jack. பக். 19–20 & 158. 
  5. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
  6. "Jacob Grimm". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jacob Grimm
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்கப்_கிரிம்&oldid=3667283" இலிருந்து மீள்விக்கப்பட்டது