ஜெயராஜ் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயராஜ்
அறியப்படுவதுஓவியங்கள், ஆடை வடிவமைப்பு
வாழ்க்கைத்
துணை
ரெஜினா
பிள்ளைகள்ஹில்டா, டிஸ்னி

ஜெயராஜ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். அட்டைப்பட ஓவியங்கள், படைப்புகளுக்கான ஓவியங்கள், சித்திரக்கதை போன்ற துறைகளிலும், திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிற்பி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியுள்ளார்.

ஓவியச் சக்ரவர்த்தி, ஓவியச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் வரைந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் 47 பத்திரிக்கைகளில் வந்துள்ளன.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். கல்லூரியில் படிக்கும் பொழுதே அவருடைய ஓவியங்கள் வருட இதழ்களில் வெளிவந்துள்ளன. ஜெயராஜ் 1962 இல் ரெஜினா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[2] இத்தம்பதிகளுக்கு ஹில்டா, டிஸ்னி என குழந்தைகள் உள்ளனர்.

படைப்புகள்[தொகு]

இவரது கோட்டோவியம் 1958 அக்டோபர் 10 இல் குமுதத்தில் வெளியானது.

தமிழ்நாடு பாட நூல்கள், ஓரியண்ட் லாங்மென், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி, அறிவொளி இயக்கம், குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்பணர்வு, சாம்பா பப்ளிகேஷன்ஸ் பாட நூல்கள், ஒய்.ஆர்.ஜி.கேர் போன்றவற்றிக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். அகிலன், லட்சுமி, கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, இந்துமதி, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்.

குழந்தைகளுக்கான ஆக்ஸ்போர்ட் அகராதிக்கு ஓவியம் வரைந்து தந்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாவின் கதையில் நடுவானம் என்ற சித்திரக்கதை வரைந்துள்ளார்.[3]

திரைத்துறை[தொகு]

இவர் தமிழ்த் திரைப்படங்களில் துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

  • நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
  • ஜானி

விருதுகள்[தொகு]

  • கலைஞரின் முரசொலி அறக்கட்டளை பொற்கிழி தந்துள்ளது.
  • ஓவியச் சக்கரவர்த்தி பட்டம் - தூத்துக்குடி.
  • மலேசியாவில் தூரிகை மன்னன் பட்டம்
  • விஜிபி விருது, வாஷிங்டன் டி.சி.,யில் ஓவியச் செம்மல் பட்டம்
  • சீதாப்பாட்டி- அப்புசாமி அறக்கட்டளை விருது

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. நாம்தான், நாம் இருக்கும் இடம்தான் கடவுள்!’’ - ஓவியர் ஜெயராஜ் விகடன்
  2. ஜெ 60 - நா.கதிர்வேலன்- குங்குமம் - 30 நவம்பர் 2018
  3. ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் - அரவிந்த் சுவாமிநாதன். தென்றல் இதழ் - செப்டம்பர் 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயராஜ்_(ஓவியர்)&oldid=3733272" இருந்து மீள்விக்கப்பட்டது