பட்டுக்கோட்டை பிரபாகர்
Appearance
பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar; பிறப்பு:30 சூலை 1958) பிரபலமான தமிழ் எழுத்தாளராவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனி இதழ்களாகவும் வெளிவந்துள்ளன. இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளை சார்ந்ததாகும். மேலும் இவரது படைப்புகளை ஆரம்பகாலத்தில் ராதா பிரபா என்ற பெயரில் வெளியிட்டு வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிரபாகர் 1958 சூலை 30 இல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இராதாகிருஷ்ணன்–சந்திரா இணையாருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணமாகி சுவர்ணரம்யா, சுவர்ணபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.[1][2]
படைப்புகள்
[தொகு](அகரவரிசையில்)
- ஆகவே செக்சன் 302 படி; 1988; கல்கியில் வெளிவந்த தொடர்.
- உயிர்வரை இனித்தவள்
- கிழக்குத் தொடர்ச்சிக் கொலைகள்
- சுசிலாவுக்கு ஒரு சல்யூட்
- தயாளன் தீர்ப்பு
- தொட்டால் தொடரும்; 1986; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
- வல்லமை தாராயோ;1988; கல்கியில் வெளிவந்தது
- வெட்டு, குத்து, கண்ணே காதலி 1994 ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்
- வெள்ளைக்கொடி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாதேவன், சந்தோஷ். "`பயணம்' பிரச்னை முதல், `காப்பான்' கதைத் திருட்டு வழக்கு வரை... பட்டுக்கோட்டை பிரபாகர் ஷேரிங்ஸ்" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/pattukottai-prabhakar-on-the-current-trends-of-tamil-cinema.
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - பட்டுக்கோட்டை பிரபாகர்". www.tamilonline.com. Retrieved 2022-03-26.
வெளியிணைப்புகள்
[தொகு]- தினமலர் பரணிடப்பட்டது 2012-03-08 at the வந்தவழி இயந்திரம்
- பட்டுக்கோட்டை-பிரபாகர் புத்தகங்கள்