உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் அல்லது உன்னதமானவர்கள் ஜெனானா அல்லது பெண்கள் குடியிருப்புக்கு வருகை தருகின்றனர்

ஜெனானா (Zenana); என்பது இந்திய துணைக் கண்டத்தில் ஓர் இந்து அல்லது முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வீட்டின் பகுதியைக் குறிக்கிறது. அதாவது இதன் நேரடிப் பொருள் "பெண்கள்" அல்லது "பெண்களைப் பற்றியது" என்பதாகும். வீட்டுப் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வீட்டின் பகுதி ஜெனானா என்று அழைக்கப்பட்டது. குடும்பத்தின் பெண்கள் வசிக்கும் ஒரு வீட்டின் உள் குடியிருப்புகள் தான் ஜெனானா. இந்த ஜெனானா முற்றிலும் பெண்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. [1]. விருந்தினர்கள் மற்றும் ஆண்களுக்கான வெளிப்புற குடியிருப்புகள் மர்தானா என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள் கருத்தியல் ரீதியாக பர்தாவைப் பின்பற்றுபவர்கள், இது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள ஹரேம் என்பதற்கு இது சமமானதாகும்.

பிரித்தானிய இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த ஜெனானாவில் வசிக்கும் இந்திய பெண்களை ஜெனானா தூதுக்குழுக்கள் மூலம் அணுக முடிந்தது; மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பயிற்சி பெற்ற பெண் குழுக்கள் அவர்களுக்கு சுகாதார சேவையை வழங்க முடிந்தது, மேலும் அவர்களின் சொந்த வீடுகளிலேயே அவர்களுக்கான சுவிஷேச நற்செய்திகளை ஜெனானா தூதுக்குழுவினர் பெறச் செய்தனர்.

முகலாய அரசவை வாழ்க்கை

[தொகு]

அமைப்பு ரீதியாக முகலாய அந்தப்புரங்களான ஜெனானாக்கள் விதிவிலக்காக ஆடம்பரமான நிலைமைகளைக் கொண்டிருந்தது, குறிப்பாக இளவரசிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள பெண்களின் அந்தப்புரங்களான ஜெனானாக்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்தன. பெண்கள் குடியிருப்புகளை அணுகுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் அந்தப்புரங்களைப் பற்றிய நம்பகமான விளக்கங்கள் மிகக் குறைவு. இருப்பினும், இதுவரை முகலாயர்கள் காலத்தின் அரசவைப் பதிவுகள் மற்றும் பயணக் குறிப்புகளை மதிப்பீடு செய்யும் நவீன அறிஞர்கள் பெண்கள் தங்குமிடங்கள் முற்றங்கள், குளங்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்களைக் கொன்டிருந்ததாக விவரிக்கின்றனர். அரண்மனைகள் கண்ணாடிகள், ஓவியங்கள் மற்றும் பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டன. [2] ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹால் ஆகியோரின் மகள் ஜஹானாரா புகழ்பெற்ற தனது சொந்த குடியிருப்பானது மதிப்புமிக்க தரைவிரிப்புகள் மற்றும் பறக்கும் தேவதூதர்களின் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்ட்டிருந்தது. அரச வாழ்க்கைக்கான எடுத்துக்காட்டுகளில் சித்தரிக்கப்பட்டுள்ள பிற வசதிகள் ஓடும் நீரோட்டத்துடன் கூடிய நீர்நிலைகள், கவனமாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்கள் ஆகியவை அடங்கும். [3]

வசிக்கும் மக்கள் தொகை

[தொகு]

ஐரோப்பிய கற்பனையால் பிரபலப்படுத்தப்பட்ட உரிமைக்குட்பட்ட, கட்டுப்பாடுகளுடன் கூடிய செயல்பாட்டற்கான சிறை போன்ற இடமாக இருப்பதற்குப் பதிலாக ( ஓரியண்டலிசத்தைப் பார்க்கவும்), ஜெனானாவானது வீட்டுப் பெண் உறுப்பினர்களின் களமாக செயல்பட்டது, மனைவிகள் முதல் காமக்கிழத்திகள் வரை, விதவைகள், திருமணமாகாத சகோதரிகள் மற்றும் உறவினர்கள் வரை, மேலும் தொலைவில் சார்பு உறவினர்களாக கருதப்பட்ட உறவுகள். அந்தஸ்துள்ள பெண்கள் வாழும் இடமாக ஜெனானா இருந்தது. அக்பரின் அந்தப்புரமான ஜெனானாவில் 5000 பெண்கள் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[4] மேலதிகமாக, உள்ளே வசிக்கும் பெண்களின் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திறமை மற்றும் குறிக்கோள்கள் கொண்ட உதவியாளர்களால் ஜெனானா நிறைந்திருந்தது. வருகை தரும் நண்பர்கள், ஊழியர்கள் மற்றும் பொழுதுபோக்கு வீரர்கள் ,ஆயுதமேந்திய உயர் பயிற்சி பெற்ற பெண்களின் படைப்பிரிவுகள் வரை அனைவருமே தவிர்க்கமுடியாமல் பெண்களாக இருந்தனர். இந்தப் பெண்களின் படைப்பிரிவு உர்துபெகிஸ் என்று அழைக்கப்பட்டது இவர்கள் ஜெனானாவில் பெண்களை அழைத்துச் செல்லவும் பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டனர். [5]

ஃபதேபூர் சிக்ரியில் ஜெனானாவுக்கு வலுவான நுழைவு.

நிர்வாகம்

[தொகு]

அக்பர்நாமா,வின் ஆசிரியர் அபுல்-பாசல் இப்ன் முபாரக், என்பவரின் கூற்றுப்படி பேரரசர் அக்பரின் ஜெனானாவான பதேபூர் சிக்ரி உயர்குடிப் பெண்களின் அந்தப்புரமானது ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் தாயகமாக விளங்கியது.[6] ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சொந்த அறைகள் மற்றும் குடியிருப்புகளைக் கொண்டதாக அது இருந்தது..[7] ஜெனானாவின் அளவு என்பது அதற்குள் ஒரு சமூகமே இயங்கக்கூடிய அளவுக்குப் பெரியதாக இருந்தது. இதனால் இதனைப் பராமரிக்க முறையான நிர்வாகம் தேவைப்பட்டது; இந்த நிர்வாகிகள் அனைவரும் பெண்களாகவே இருந்தனர். அபுல் பசல் ஜெனானாவை பிரிவுகளாகப் பிரிப்பதாக விவரிக்கிறார், குடியிருப்பாளர்களின் நிதி மற்றும் நிறுவன தேவைகளுக்கு ஏற்றவாறு தரோகாக்கள் நியமிக்கப்படுகிறார்கள். [8] பிற நிர்வாக பதவிகளில் தெஹ்வில்தார் அல்லது கணக்கு அதிகாரி, குடிமக்களின் சம்பளம் மற்றும் நிதி கோரிக்கைகளுக்கு பொறுப்பானவர். தரோகாக்களின் அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊழியரான மஹால்தார்கள் மிக உயர்ந்த அதிகாரத்தில் இருந்தனர், அவர்கள் பெரும்பாலும் ஜெனானாவிலிருந்து நேரடியாக பேரரசருக்கு உளவுத்துறை ஆதாரமாக செயல்பட்டனர். அனகாக்கள்,எனப்படும் அரசவைத் தாதிகள் தங்கள் பதவியிலிருந்து உயர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டனர், இருப்பினும் இந்தப் பதவியுயர்வின் நோக்கம் கண்டிப்பாக நிர்வாகத்திற்கானதாக இல்லை. . [9]

குறிப்புகள்

[தொகு]
  1. Lal, K.S. (1988). The Mughal Harem. New Delhi: Aditya Prakashan. pp. 14, 52–55. ISBN 8185179034.
  2. Misra, Rekha (1967). Women in Mughal India. New Delhi: Munshiram Manoharlal. pp. 76–77. கணினி நூலகம் 473530.
  3. Schimmel, Annemarie. The Empire of the Great Mughals: History, art and culture. London: Reaktion Books LTD. ISBN 1861891857.
  4. Abu 'l-Fazl Allami (1977). Phillot, Lieut. Colonel D.C. (ed.). The Ain-i Akbari. Trans. H. Blochman. Delhi: Munishram Manoharlal. pp. 45–47. ISBN 9788186142240.
  5. Hambly, Gavin (1998). "Chapter 19: Armed Women Retainers in the Zenanas of Indo-Muslim Rulers: The case of Bibi Fatima". In Hambly, Gavin (ed.). Women in the medieval Islamic world : Power, patronage, and piety (1st ed.). New York: St. Martin's Press. pp. 429–467. ISBN 0312224516.
  6. Abu 'l-Fazl Allami (1977). Phillot, Lieut. Colonel D.C. (ed.). The Ain-i Akbari. Trans. H. Blochman. Delhi: Munishram Manoharlal. pp. 45–47. ISBN 9788186142240.
  7. Abu 'l-Fazl Allami (1977). Phillot, Lieut. Colonel D.C. (ed.). The Ain-i Akbari. Trans. H. Blochman. Delhi: Munishram Manoharlal. pp. 45–47. ISBN 9788186142240.
  8. Abu 'l-Fazl Allami; Blochman, H (1977). Phillot, Lieut. Colonel D.C. (ed.). The Ain-i Akbari (3rd ed.). New Delhi: Munishram Manoharlal. pp. 45–47.
  9. Lal. The Mughal Harem. New Delhi: Aditya Prakashan. pp. 14, 52.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனானா&oldid=3849389" இலிருந்து மீள்விக்கப்பட்டது