ஜி. வி. பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. வி. பிரசாத்
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிடாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் இணைத் தலைவர், நிர்வாக இயக்குநர்
பிள்ளைகள்சரத் குணபதி (மகன்)
உறவினர்கள்

ஜி. வி. பிரசாத் (G. V. Prasad) ஓர் இந்திய வணிக நிர்வாகியும், டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் இணைத் தலைவரும், நிர்வாக இயக்குநரும் ஆவார். [1] அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படித்தார். சிகாகோவிலுள்ள இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்து பர்டூ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட வணிக மேலாண்மை படித்தார். 1982 இல் அமெரிக்க வேதியியலாளர் நிறுவனம் வழங்கும் 'சிறந்த மூத்த மாணவர்' விருதை வென்றார். ஒரு வருடம் கழித்து பர்டூ பல்கலைக்கழகத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [2]

பிரசாத் 1985 இல் பென்செக்ஸ் லேப்ஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். பென்செக்ஸ் பின்னர் டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியால் கையகப்படுத்தப்பட்டது. சில காலம் கட்டுமானத் தொழிலுக்குத் திரும்பினார். 1990 ஆம் ஆண்டில், இவர் சார்மினார் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 2001 ஆம் ஆண்டில், இவரது நிறுவனமும் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது [3] மேலும் பிரசாத் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரசாத், டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் நிறுவனர் கள்ளம் அஞ்சி ரெட்டியின் மகள் அனுராதாவை மணந்தார். [5] அனுராதா டாக்டர். ரெட்டீசு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிறுவனமான சப்தபர்ணியின் நிறுவனர்-இயக்குனராகவும் இருக்கிறார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "G V Prasad - Profile". Forbes.
  2. "Archived copy" (PDF).
  3. "Dr. Reddy's, Cheminor merger swap at 9:25". பிசினஸ் லைன். 1 June 2000. http://www.hindu.com/businessline/2000/06/01/stories/14015103.htm. 
  4. Dr. Reddy’s Q4 net down - The Hindu
  5. "K. Anji Reddy". போர்ப்ஸ். Archived from the original on 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
  6. GV Prasad is new DRL chief - The Times of India

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._பிரசாத்&oldid=3820844" இலிருந்து மீள்விக்கப்பட்டது