ஜி. பார்கவன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. பார்கவன் பிள்ளை (G Bhargavan Pillai)(1933-2009), கேரளாவைச் சேர்ந்த பிரபலமான நாட்டுப்புற எழுத்தாளர்களில் ஒருவர். கேரளாவின் கண்ணூரில் அமைந்துள்ள கேரள நாட்டுப்புற அகாதமியின் நிறுவனர் தலைவராக இருந்தார்.[1] பிள்ளையின் மிகவும் பிரபலமான படைப்பாக கக்கரிச்சி நாடகமும் (1976, மலையாளம்), கக்கரிச்சி நாடகம் பற்றிய புத்தகமும் உள்ளன.[2] பார்கவன் பிள்ளை 17 ஏப்ரல் 2009 அன்று தனது 75வது வயதில் திருவனந்தபுரத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பார்க்கவன் பிள்ளை

பார்கவன் பிள்ளையின் நாட்டுப்புற இலக்கிய எழுத்தாளராக அறியப்பட்டார். இவரது மனைவி கே.ஜி.லீலாவதி ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிள்ளை கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பந்தளம் அருகே உள்ள குடச்சநாடு என்ற சிறிய கிராமத்தில் முண்டக்கல் குடும்பத்தில் பிறந்தார். இவர் பந்தளம் என். எஸ். எஸ். கல்லூரியில் தாவரவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் மலையாளத்தில் கேரளா பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, 1991-ல் தயாரிப்பாளராகப் பணி ஓய்வு பெற்றார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

பிள்ளை 1977-ல் கேரளாவின் பாரம்பரிய கலை வடிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் மூத்த நிதியுதவித் தொகையினைப் பெற்றார். இவர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் உதவித்தொகையும் பெற்றவர் ஆவார்.(பரணிடப்பட்டது 10 சனவரி 2019 at the வந்தவழி இயந்திரம் (1986). பார்கவன் பிள்ளை 1994ல் கேரள சங்கீத நாடக அகாதமியின் விருது ஒன்றைப் பெற்றார். இவருக்கு 1996-ல் ரேவதி பட்டத்தானம் விருது வழங்கப்பட்டது.

முக்கிய படைப்புகள்[தொகு]

பார்கவனின் முக்கிய படைப்புகளில் சில:[3]

  • பொரொட்டு நடக்கவும் மாட்டும்
  • கேரளாத்திலே பாணன்மார் பாடுன்னு
  • மத்திலேறிக்கண்ணி பணியாலயில்
  • வானொலி நாடகம் (படிப்பு)
  • கக்கரிச்சிநாடகம்
  • ஆலயங்கள் தாரா வேனம் (நாட்டுப்புற பாடல்)
  • நாட்டரங்கு: விகாசும் பரிணாமவும்
  • இதிஹாச புத்திரர்கள்
  • பூமுகம்
  • ஈவி யுதே ஜீவசரித்திரம்
  • பந்தளம் கே.பி - காவ்யஜீவிதம்
  • ஆகாசவாணியில் இன்னாலே
  • நாடோடி நாடகங்களுடே பின்னாலே[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  2. "Kakkarissi Natakam - a satirical dance-drama, Performing art".
  3. https://dcbookstore.com/authors/bhargavan-pillai-g
  4. https://www.exoticindiaart.com/book-author/g%20bhargavan%20pillai/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பார்கவன்_பிள்ளை&oldid=3698247" இலிருந்து மீள்விக்கப்பட்டது