உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள நாட்டுப்புற அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள நாட்டுப்புற அகாதமி
Kerala Folklore Academy
உருவாக்கம்28 சூன் 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-06-28)
வகைபண்பாட்டு நிறுவனம்
தலைமையகம்சிராக்கல், கண்ணூர், கேரளா,
 இந்தியா
தலைவர்
ஓ. எசு. உன்னிகிருஷ்ணன்
செயலர்
ஏ. வி. அஜய்குமார்
தாய் அமைப்பு
கேரள கலாச்சார பண்பாட்டுத் துறை
வலைத்தளம்keralafolklore.org

கேரள நாட்டுப்புற அகாதமி (Kerala Folklore Academy) என்பது கேரள அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சார விவகாரங்களுக்கான ஒரு தன்னாட்சி மையம் ஆகும். இந்த அமைப்பு கலாச்சார விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது. இது 28 சூன் 1995 அன்று கேரளாவின் பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கவும் முன்னிறுத்தவும் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கண்ணூர், என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த அகாதமி நாட்டுப்புறவியல் பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கக் காலாண்டு ஆய்விதழை வெளியிடுகிறது. மேலும் கேரளாவின் நாட்டுப்புறவியல் பற்றிய 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கேரளாவின் 100 வகையான நாட்டுப்புறக் கலை வடிவங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றினையும் இரண்டு அகராதிகளையும் தயாரித்துள்ளது. இதில் ஒன்று சாவிட்டு நாடகம் மற்றும் மற்றொன்று பியரி மொழி குறித்தது.[2]

வரலாறு[தொகு]

கேரள நாட்டுப்புற அகாதமி நிறுவனம் 1955ஆம் ஆண்டின் திருவிதாங்கூர் கொச்சி இலக்கியம், அறிவியல் மற்றும் தொண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 20 சனவரி 1996 முதல் இது செயல்படத் தொடங்கியது.[1] நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி அளிப்பதற்காகவும், அவற்றின் வளர்ச்சி, ஊக்குவிப்பு மற்றும் நிலைத்து நிற்கும் முயற்சிகளை உறுதி செய்யவும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2003ஆம் ஆண்டில், மாநில அரசு, சிராக்கல் அரசர்களின் நீர்நிலை பகுதி அரண்மனையை, இவர்களின் தலைமையகமாகப் பயன்படுத்துவதற்காக, அகாதமியிடம் ஒப்படைத்தது.[2] அகாதமியின் முன்னாள் செயலர் எம். பிரதீப் குமார் கூறும்போது, "சமீபத்தில் அகாதமி தனது ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளில், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் பல்வேறு நாட்டுப்புற கலை வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது எனவும், பிராமினி பாட்டு, சாட்டு பாட்டு, சக்கர பாட்டு, கடல் வஞ்சி பாட்டு மற்றும் பழங்குடியினர் பாடல்கள் ஆகியவை நாட்டுப்புறக் கலையில் சமீபத்திய சேர்க்கைகளாகும் என்று தெரிவித்தார். மேலும், பழங்குடி மற்றும் பாரம்பரிய பாடல்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு பழங்குடியினரின் பாடல் 'ஊரு' (பழங்குடிகள்) வேறுபட்டவை. கேரளாவில் கிட்டத்தட்ட 1000 நாட்டுப்புறக் கலை வடிவங்கள் உள்ளன என்றும் இவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டுள்ளன" என்றும் தெரிவிக்கிறார்.[3]

விருதுகள்[தொகு]

கேரள நாட்டுப்புற அகாதமி பிரபலமான கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறவியல் துறையில் நிபுணர்களுக்குப் பரிசுகள் மற்றும் ஆய்வு உதவித்தொகையினை வழங்குகிறது.[4] உதவித்தொகை ஒவ்வொன்றும் ரூபாய் 15000 மற்றும் மேற்கோள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டுப்புறவியல் விருதுகள் மற்றும் புத்தக விருது ரூபாய் 7500 மற்றும் சான்றிதழைக் கொண்டுள்ளது. குருபூஜை மற்றும் யுவபிரதிபா விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.[5][6]

பி. கே. காலான் விருது

கேரள நாட்டுப்புற அகாதமியின் முன்னாள் தலைவரும், கதிகா கலைஞரும், சமூக ஆர்வலருமான பி. கே. காலான் பெயரில் 2008ல் பி. கே. காலான் விருது நிறுவப்பட்டது. இது நாட்டுப்புற கலை வடிவங்கள் துறையில் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவர் ரூபாய் 100,000 ரொக்கப் பரிசுடன், சான்றிதழ் மற்றும் சிலை ஒன்றினைப் பரிசாகப் பெறுவார்.[7] அகாதமி தலைவரும், கதிகா கலைஞரும், சமூக ஆர்வலருமான பி. கே. காலான் பெயரில் 2008ல் பி. கே. காலான் விருது நிறுவப்பட்டது. இது நாட்டுப்புறக் கலை வடிவங்கள் துறையில் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவர் ரூபாய் 100,000 ரொக்கப் பரிசுடன், சான்றிதழ் மற்றும் சிலை ஒன்றினைப் பரிசாகப் பெறுவார்.[7]

ஆண்டு விருதாளர் பங்களிப்பு குறிப்பு
2009 கண்ண பெருவண்ணன் தெய்யம் கலை வடிவத்திற்கு சிறந்த பங்களிப்பு [8]
2009 எம். வி. விஷ்ணு நம்பூதிரி நாட்டுப்புறவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான பங்களிப்புகள் [9]
2014 சி. கே. ஆண்டி தெய்யம் கலை வடிவத்திற்கு சிறந்த பங்களிப்பு [10]
2015 என். அஜித் குமார் மொழி, இலக்கியம், நாட்டுப்புற கலைகள், சினிமா மற்றும் பிற கலை வடிவங்களில் பங்களிப்பு. [7][11]
2022 செருவயல் ராமன் [12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "About Kerala Folklore Academy". KFA. Archived from the original on 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 2. 2.0 2.1 "Kerala Folklore Academy". Department of Cultural Affairs (Kerala). Archived from the original on 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 3. B. S., Shibu (22 January 2014). "Folk Art Forms from Far and Wide to Converge in City". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 4. "Kerala Folklore Academi Awards & Fellowships 1999 – 2011". Department of Cultural Affairs (Kerala). Archived from the original on 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 5. P., Sudhakaran (29 September 2018). "Kerala Folklore Akademi Fellowships, Awards announced". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 6. "Folklore akademi awards announced". தி இந்து. 8 July 2017. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 7. 7.0 7.1 7.2 "P K Kalan Award for Ajithkumar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 December 2015. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 8. "P.K. Kalan award for Theyyam artiste Kanna Peruvannan". தி இந்து. 25 August 2009. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 9. "P K Kalan Award for M V Vishnu Namboothiri". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 23 December 2009. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 10. "The humble 'Kuruthola' with a mighty story behind it". Mathrubhumi. 7 September 2016. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 11. "P.K. Kalan Puraskaram". தி இந்து. 9 December 2015. Archived from the original on 13 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
 12. https://thesouthfirst.com/news/meet-cheruvayal-raman-of-kerala-the-countrys-lone-living-paddy-gene-bank/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_நாட்டுப்புற_அகாதமி&oldid=3760899" இலிருந்து மீள்விக்கப்பட்டது