எம். வி. விஷ்ணு நம்பூதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர் எம். வி. விஷ்ணு நம்பூதிரி (ஆங்கிலம்:M. V. Vishnu Nampoothiri, (பிறப்பு 1939 அக்டோபர் 25) ஓர் மலையாள நாட்டுப்புறவியலாளர். இவர் நாட்டுப்பாடல்கள்,தோற்றப் பாடல்கள் மற்றும் தெய்யம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கேரள நாட்டுப்புறவியல் அகாதமி தலைவராக இருந்துள்ளார்.

1939 அக்டோபர் 25-ஆம் தேதி பையனூர் அருகே உள்ள குந்நுருவி கிராமத்தில் பிறந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ. பட்டமும், கேரள பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார். காலடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

கோழிக்கோடு பல்கலை நாட்டுப்புறவியல் பிரிவின் தலைவராக பணியாற்றி ஒய்வு பெற்றார். நாட்டுப்புறவியல் குறித்த 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இதில் குறிப்பாக நாட்டுப்புறவியல் அகராதி (Folklore Dictionary) தமிழுக்கும் மலையாளத்துக்குமான பொது வெளியை வெளிப்படுத்தும் வகையிலானது.

விருதுகள்[தொகு]

  1. போக்லோர் அகாதமி விருது (1998)
  2. கேரள சாஹித்ய அகாதமியின் ஐ.சி. சாக்கோ என்டோவ்மென்ட் விருது (1992)
  3. நாட்டுப்புற ஆய்வாளருக்கான பி.கே. காளி விருது (2009)[1]
  4. பி.கே. பரமேசுவரன் நாயர் அறக்கட்டளை விருது (2011)
  5. மத்திய பண்பாட்டுத்துறையின் சீனியர் பெலோஷிப்

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து - ஆங்கிலச் செய்தி