ஜி. இராமச்சந்திரன் (சமூக ஆர்வலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. இராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜி. இராமச்சந்திரன் (G. Ramachandhran) (1904 – 1995) கேரளா மாநிலத்தின் நெய்யாற்றிங்கரை நகரத்தை இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். காந்திய[1] சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், கல்வியாளரும் ஆவார்.[2]

டி. வி. சுந்தரம் அய்யங்காரின் மகளும், தன் மனைவியுமான மருத்துவர். டி. எஸ். சௌந்தரத்துடன் இணைந்து ஜி. இராமாச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளப்பட்டி அருகமைந்த தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காந்திகிராமத்தில் 1947ல் காந்தி கிராம அறக்கட்டளையை நிறுவினர்.[3][4]

இவ்வறக்கட்டளை மூலம் கிராமப்புற மக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவச் சேவைகளை வழங்க பல சமூக சேவை நிறுவனங்கள் துவக்கப்பட்டது. அவைகளில் முதன்மையானது காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆகும். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் நிறுவிய ஜி. இராமச்சந்திரன், அதன் நிறுவனத் துணைவேந்தராக 09. 12. 1976 - 08.12.1979 முடிய பதவி வகித்தார்.[5]

ஜி. இராமச்சந்திரன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) பெருந்தலைவராகப் பணியாற்றியவர்.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]