ஜி-7
எழு நாடுகளின் கூட்டமைப்பு | |||||||||||||||||
நெதர்லாந்து தலைமையில் நடைபெற்ற G7 நாடுகளின் தலைவர்களின் கூட்டம். இதில் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்தது பற்றி விவாதம் நடைபெற்றது. | |||||||||||||||||
ஜி-7 நாடுகள் (நீல நிறத்தில்), மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (பச்சையும், நீலமும் கலந்த நிறம்)
உறுப்பு நாடுகள் மற்றும் முக்கியத் தலைவர்கள்:
| |||||||||||||||||
சுருக்கம் | G7 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முன்னோர் | ஜி8 (ருசியா நீக்கப்பட்டது) | ||||||||||||||||
உருவாக்கம் | 25 March 1973 ஜி-6 நாடுகளின் முதல் உச்சிமாநாடு: 15 November 1975 | நூலகக் குழு||||||||||||||||
நிறுவனர் | "நூலகக் குழு":
முதல் க்-6 உச்சிமாநாடு: | ||||||||||||||||
நிறுவப்பட்ட இடம் |
| ||||||||||||||||
வகை | Informal club | ||||||||||||||||
நோக்கம் | அரசியல், பொருளாதாரம் | ||||||||||||||||
துறைகள் | பன்னாட்டு அரசியல் | ||||||||||||||||
உறுப்பினர்கள் (2021) | 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் | ||||||||||||||||
நிதியுதவி | உறுப்பினர் நாடுகள் | ||||||||||||||||
வலைத்தளம் | g7germany.de | ||||||||||||||||
முன்னாள் பெயர் |
|
ஜி-7 எனில் முன்னேறிய நாடுகள் எனக்கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பாகும். இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.[1][2][3][4]
சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கிறது.
1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன. அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது.[5] அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.
ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.
ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.
ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், பூமி வெப்பமடைதல் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும். மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.
சிறப்பு அழைப்பாளர்கள்
[தொகு]ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள். பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
சவால்களும், விமர்சனங்களும்
[தொகு]தற்போதைய காலத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கிறது என்று ஜி7 குழு விமர்சிக்கப்பட்டாலும், இதனால் சில நன்மைகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. எய்ட்ஸ், காச நோய், மலேரியாவுக்கு எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த ஜி7 குழு உதவி இருக்கிறது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லியன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்த்தை அமல்படுத்த இந்த மாநாடு உந்துகோலாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜி7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் முரண்பட்டார். சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை. மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி-20-ல் இடம் பெற்றிருந்தாலும் ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is the G7?". G7 UK Presidency 2021 (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 25 December 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Report for Selected Countries Subjects". www.imf.org.
- ↑ "World Economic Outlook Database". International Monetary Fund. imf.org. October 2017. Major Advanced Economies (G7).
- ↑ "Global Wealth Databook 2021" (PDF). Credit Suisse. credit-suisse.com. 2021. Table 4-1. p. 130. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ Smale, Alison; Shear, Michael D. (24 March 2014). "Russia Is Ousted From Group of 8 by U.S. and Allies" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2014/03/25/world/europe/obama-russia-crimea.html.
வெளி இணைப்புகள்
[தொகு]