ஜியோ பேபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியோ பேபி
பிறப்புதளநாடு, எரட்டுபேட்ட
தேசியம்இந்தியன்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போது வரை

ஜியோ பேபி (Jeo Baby) இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், மலையாளத் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] இவரது தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற குடும்ப நாடகத் திரைப்படம்   சிறந்த திரைப்படத்திற்கான 51வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதை வென்றது.  இவர் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜியோ பேபி சங்கனாச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிகேஷன் கல்லூரியில் திரைப்படக் கலையைப் பயின்றார் . மாணவப் பருவத்தில், ஒரே பாலின உறவுகளைப் பற்றி விவாதிக்கும் சீக்ரெட் மைண்ட்ஸ் என்ற குறும்படத்தை இயக்கினார். குறும்படம் சர்ச்சைக்குள்ளாதனால் ஜியோ பேபியுடன் நான்கு மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[3]

குறும்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு பணி குறிப்புகள்
2007 சீக்ரெட் மைண்ட்ஸ் திரைக்கதை 1.பெங்களூர், கியூர் எல்ஜிபிடி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

2. கோசுடன், ரைசு பல்கலைக்கழகம், சர்வதேச கியூர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

நகைச்சுவைப் பகுதி[தொகு]

ஆண்டு தலைப்பு பணி தொலைக்காட்சி
2011 மரிமயம் திரைக்கதை எழுத்தாளர் மழவில் மனோரமா
2014 எம்80 மூசா திரைக்கதை எழுத்தாளர் மீடியா ஒன்
2015 உப்பும் முழகும் திரைக்கதை எழுத்தாளர் பிளவர் தொலைக்காட்சி

இயக்குநராக[தொகு]

ஆண்டு தலைப்பு நடிகர்கள் குறிப்புகள்
2016 2 பெண் குட்டிகள் அண்ணா பாத்திமா, சியாம்பவி சுரேஷ், டுவினோ தாமஸ், அமலா பால் இயக்குநராக அறிமுகமான திரைப்படம்
2017 குஞ்சு தெய்வம் ஆதிஷ் பிரவீன், ஜோசு ஜோர்ச், சித்தார்த்தா சிவா, ரெய்னா மரியா [4]
2020 கிலோமீட்டர்ஸ் அண்டு கிலோமீட்டர்ஸ் டுவினோ தாமஸ், ஜோசு ஜோர்ச், சித்தார்த்தா சிவா, இந்தியா ஜார்விஸ் [5]
2021 தி கிரேட் இந்தியன் கிச்சன் சுராஜ் வெஞ்சரமூடு, நிமிசா சாஜயன் [6]
2022 பிரீடம் பைஃட் ஜோசு ஜோர்ச், ரோகிணி, லலி பிஎம் அந்தோலஜி பிலிம்
பகுதி: ஓல்ட் ஏஜ் கோம்
சிறீதன்யா கேட்டரிங் சர்வீசு பிரசாந்து முரளி, ஜியோ பேபி, மூர், இராகுல் ரெகு, கிலு ஜோசப், பீனா ஜியோ, பேன்டம் பிரவீன் எழுதி இயக்கியது
2023 காதல் – தி கோர் மம்முட்டி, ஜோதிகா [7]

நடிகராக[தொகு]

ஜியோ பேபி சில மலையாளத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2015 எய்ன்
2018 குஞ்சு தெய்வம்
2019 எடக்காடு பேட்டலியன் 06
2020 கிலோமீட்டர்ஸ் அண்டு கிலோமீட்டர்ஸ்
2021 வர்தமனம்
கூ கூ
2022 பிரீடம் பைஃட்
சிறீதன்யா கேட்ரிங் சர்வவீஸ்
செரா
2023 புருச பிரேத்தம் [8]
கொல்லா எஸ்.ஐ. விக்டர் செபாஸ்டியன் [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Unrelenting Storyteller". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. "51st Kerala State Film Awards: The complete winners list" (in en). The Indian Express. 16 October 2021. https://indianexpress.com/article/entertainment/malayalam/51st-kerala-state-film-awards-winners-list-7574805/. 
  3. "അടുക്കളയില്‍ നിന്ന് രാഷ്ട്രീയം പറയുന്ന ജിയോ ബേബി | The Great Indian Kitchen | DoolTalk | Jeo Baby". யூடியூப். 18 சனவரி 2021. Retrieved 19 சனவரி 2021.
  4. "National award winner 'Kunjudaivam' has a quiet release". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  5. "'Kilometers and Kilometers' is an out and out entertainer-Director Jeo Baby". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  6. "Suraj ,Nimisha Film 'The Great Indian Kitchen' to release on January 15". The New Indian Express.
  7. https://www.thenewsminute.com/article/mammootty-and-jyothika-roped-jeo-baby-s-next-169022
  8. "Purusha Pretham Movie Review: Gritty procedural with an even blend of the comic and morbid". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
  9. "Kolla movie review: This Rajisha Vijayan-Priya Varrier starrer will make you yell at the screen for conspicuously missing good opportunities". The Indian Express (in ஆங்கிலம்). 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியோ_பேபி&oldid=3758176" இலிருந்து மீள்விக்கப்பட்டது