ஜிக்னேஷ் மேவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிக்னேஷ் மேவானி
2016 திசம்பர் 16 அன்று குசராதின் அகமதாபாத்தில் குசராத் இலக்கிய விழாவில்
தாய்மொழியில் பெயர்જીગ્નેશ મેવાણી
பிறப்புதிசம்பர் 11, 1982 (1982-12-11) (அகவை 41)
குசராத், அகமதாபாத்
தேசியம்இந்தியர்
கல்வி
  • இளங்கலை
  • இளங்கலை சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்குசராத் பல்கலைக்கழகம்
பணிசமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போதுவரை
அமைப்பு(கள்)ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்
கையொப்பம்

ஜிக்னேஷ் மேவானி (Jignesh Mevani (குசராத்தி: જીગ્નેશ મેવાણી) என்பவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். குஜராத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தால் அனைவராலும் கவனிக்கவைத்தவர்.[1]

Jignesh Mevani

முன் வாழ்க்கை[தொகு]

மேவானி 1982 திசம்பர் 11 அன்று குசராத்தின் அகமதாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் மெக்சனா மாவட்டத்தில் உள்ள மெனு என்னும் கிராமத்தை பூர்வீகமாக கொண்டது. இவர் அகமதாபாத் ஸ்வஸ்திக் வித்தியாலயம் மற்றும் விஸ்வ வித்யாலயா மத்யமிக் ஷாலா ஆகிய பள்ளிகளில் தமது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் தன் இளங்கலை படிப்பாக ஆங்கில இலக்கியத்தை எடுத்து 2004 ஆண்டு அகமதாபாத்தில் எச். கே. கலைக் கல்லூரியில் முடித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2007 வரை, ஊடகவியல் வெகுசன தொடர்பாடலில் பட்டயப் படிப்பை முடித்தார். 2013 இல் அபியான் என்னும் ஒரு குஜராத்தி பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றினார். அகமதாபாத்தில் உள்ள டி டி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார்.[2]

உனா நிகழ்வு[தொகு]

குசராத்தின் உனா நகர் அருகே மோட்டோ சமதியாலா என்ற கிராமத்தில் இறந்த மாடுகளின் தோலை உரித்த நான்கு தலித் இளைஞரகள் பசு பாதுகாவலர்களாக கூறிக்கொண்டவர்களால் தாக்குதலுக்கு ஆளானார். இந்நிகழ்வை காணொளியில் பதிவு செய்யப்பட்டு அது சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் கொந்தளித்த ஜிக்னேஷ் மேவானி உனா என்ற பதாகையின் கீழ் லடாத் சமிதி அமைப்பின் வழியாக அனைவரையும் ஒருங்கிணைத்தார். இந்திய விடுதலை நாளான ஆகத்து 15, அன்று உனாவைச் சென்றடையக்கூடிய வகையில் "சலோ உனா" என்ற பயணத்தைத் துவக்கினார். இந்த தலித் அஸ்மிதா யாத்திரை செளராஷ்டிராவின், அகமதாபாத்தில் இருந்து உனா நோக்கி தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான தலித் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டனர். அஸ்மிதா யாத்திரை 2016 ஆகத்து 15 அன்று உணாவில் ஒரு மகாசபை வடிவில் முடிந்தது. ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, தலித் பெண்கள் உட்பட சுமார் 20,000 தலித்துகள், மாட்டின் பிணங்களை அப்புறப்படுத்தும் தங்களது பாரம்பரிய வேலைகளை விடுவதாக உறுதிமொழியை எடுத்தனர். மேலும் தங்களுக்கு நிலம் வேண்டுமென்று கேட்டனர். புதிய முழக்கமாக, "நீங்கள் பசுவின் வாலைப் பிடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு எங்கள் நிலங்களைத் தாருங்கள்" என முழங்கினர். இதன் ஜிக்னேஷ் மேவானி இடது அரசியலில் கவனிக்கத்தக்கவராக ஆனார்.[1][3][4] பின்னர் ராஷ்ட்ரிய தலித் அதிகாரி மஞ்ச் என்ற அமைப்பைத் தொடங்கி பட்டியலின மக்களின் நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து துரல் எழுப்பினார்.

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு இ.தே.கா ஆதரவுடன் வென்றார். இந்நிலையில் இவர் 2021 ஆண்டு இ.தே.காங்கிரசின் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து, வரும் 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "10 things to know about Jignesh Mevani, the man leading Gujarats Dalit agitation". India Today. 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  2. Vankar, Devendra (October 2016). Parmar, Anita (ed.). "Introduction article on Jignesh Mevani". Sanvedana Samaj. Ahmedabad: Kishor Makwana.
  3. Pathak, Maulik (2016-10-07). "We plan to take our fight to other parts of India: Jignesh Mevani". www.livemint.com/. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  4. "The Leader Of The Fledgling Dalit Uprising In Gujarat Is Determined To Not Let It Die". Huffington Post India. 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  5. "காங்கிரஸில் மேவானி, கன்ஹையா: தாக்கங்கள் என்ன?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்னேஷ்_மேவானி&oldid=3480175" இலிருந்து மீள்விக்கப்பட்டது