ஜார்ஜ் கோர்டன் பைரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் கோர்டன் பைரன்

பிறப்பு பைரன் பிரபு
சனவரி 22, 1788(1788-01-22)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு 19 ஏப்ரல் 1824(1824-04-19) (அகவை 36)
மெசோலொங்கி, கிரீஸ்
தொழில் கவிஞர், புரட்சியாளர்
கையொப்பம் Autograph-LordByron.png

பிற்காலத்தில் நொயெல், ஆறாம் பாரன் பைரன் ஆன ஜார்ஜ் கோர்டன் பைரன் (Lord Byron) (22 ஜனவரி 1788–19 ஏப்ரல் 1824), ஒரு ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞரும், புனைவிய (Romanticism) இயக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவரும் ஆவார். பைரனின் நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் அவள் அழகில் நடக்கிறாள் (She walks in beauty), போன்ற சுருக்கமான கவிதைகளும் சில்டே ஹரால்டின் யாத்திரை (Childe Harold's Pilgrimage), டொன் ஜுவான் (Don Juan) போன்ற விளக்கக் கவிதைகளும் அடங்கும். இவர் மிகப் பெரும் ஐரோப்பியக் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுவதோடு, ஆங்கிலம் பேசும் நாடுகளிலும், அதற்கு அப்பாலும், இன்றும் இவரது கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவனவாகவும், செல்வாக்கு மிக்கனவாகவும் திகழ்கின்றன. பைரனின் புகழ் அவரது ஆக்கங்களில் மட்டுமன்றி அவரது வாழ்க்கையிலும் தங்கியுள்ளது. இவரது வாழ்க்கை, ஆடம்பரம், ஏராளமான காதல்கள், கடன்கள், பிரிவுகள் என்பவற்றால் நிறைந்திருந்தது.

தாமஸ் பிலிப்ஸால் வரையப்பட்ட பைரன் ஓவியம்

ஆஸ்திரியாவுக்கு எதிரான போரில், காபனாரி எனப்பட்ட இத்தாலியின் புரட்சிகர அமைப்பின் பகுதித் தலைவர்களில் ஒருவராக இவர் பணியாற்றினார். பின்னர் இவர், விடுதலைக்கான கிரேக்கப் போரில், ஓட்டோமான் பேரரசுடன் போர் புரிவதற்காகச் சென்றார். இதனால் கிரேக்கர்கள் இவரை ஒரு தேசிய வீரராகப் போற்றுகின்றனர்.

மரணப்படுக்கையில் பைரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_கோர்டன்_பைரன்&oldid=2291872" இருந்து மீள்விக்கப்பட்டது