ஜாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ஜாரியா
झरिया
தன்பாத் அருகில்
ஜாரியா is located in Jharkhand
ஜாரியா
ஜாரியா
ஜாரியா is located in இந்தியா
ஜாரியா
ஜாரியா
இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் ஜாரியாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°45′06″N 86°25′13″E / 23.751568°N 86.420345°E / 23.751568; 86.420345ஆள்கூறுகள்: 23°45′06″N 86°25′13″E / 23.751568°N 86.420345°E / 23.751568; 86.420345
நாடுஇந்தியா
மாநிலம்ஜார்க்கண்டு
மாவட்டம்தன்பாத்
ஏற்றம்77
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்81,979
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுJH
இணையதளம்dhanbad.nic.in
[1]

ஜாரியா (Jharia) இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் தன்பாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தன்பாத் நகரத்திற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் அமைந்த ஊராகும். ஜாரியா 2006ல் தன்பாத் மாநகராட்சியுடன் இணைக்கபப்ட்டது. [2][3]இந்நகரம் பல நிலக்கரிச் சுரங்கங்களால் பெயர் பெற்றது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாரியாவின் மக்கள் தொகை 81,979 ஆகும்.[4] அதில் ஆண்கள் 54%ம்; பெண்கள் 46% ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 68% ஆகும். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 14% ஆக உள்ளனர்.

இடம்பெயர்வு[தொகு]

ஜாரியாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் அடிக்கடி ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத தீயாலும், நிலத்தின் மேற்பரப்பில் ஏற்படும் பெரும் வெடிப்புகளாலும், மக்கள் ஜாரியாவில் நிம்மதியாக வாழ்க்கை வாழ இயலாதபடியால், ஜாரியாவை விட்டு வெளி இடங்களுக்கு இடம் பெயர ஜார்கண்ட் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ஜாரியாவின் சுரங்கங்களிலிருந்து இன்னும் வெட்டி எடுக்க வேண்டிய 60,000 கோடி (US$12 billion) மதிப்புள்ள நிலக்கரி வளங்களை அரசு எளிதாக சுரண்டி எடுக்க வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. [5]

நிலக்கரி சுரங்கங்கள்[தொகு]

ஜாரியா நிலக்கரி சுரங்கம்

தாமோதர் ஆற்று படுகையில் உள்ள ஜாரியாவில் 110 சதுர கிலோ மீட்டர் பரப்பில், நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களும், திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்களும் உள்ளது. [6][5]

ஜாரியாவில் 1894 ஆண்டு முதல் நிலக்கரியை சுரங்கங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இச்சுரங்கங்கள் 1971ல் பொதுவுடைமையாக்கப்பட்டது. ஜாரியாவைச் சுற்றி இரும்பாலைகள் மற்றும் உருக்காலைகள் உள்ளது.

நிலக்கரி சுரங்க தீ[தொகு]

ஜாரியாவின் 70 நிலக்கரி சுரங்கங்களிலிருந்து 1916 முதல் நிலக்கரி தீயினால் பற்றி எரிகிறது. [5] சுரங்கத் துறையால் கட்டுப்படுத்த இயலாத இந்நிலக்கரிச் சுரங்கத் தீயை இதுவரை அணைக்க இயலவில்லை. இதனால் இப்பகுதி முழுவதும் கரியமில வாயு மற்றும் நிலக்கரி துகள்களின் மாசு படர்ந்துள்ளதால் மக்களின் உடல் நலம் குன்றியுள்ளது. [7] மேலும் நிலக்கரி சுரங்கத் தீயால், நிலத்தின் மேற்பரப்புகள் வெடித்து பெரும் பள்ளங்கள் உருவாகிறது. [8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாரியா&oldid=2430375" இருந்து மீள்விக்கப்பட்டது