உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஏ. பீகாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஆந்திரூ பீகாக்
1989 ஆம் ஆண்டில் எடின்பரோ ராயல் வான்காணகத்தில் பணியாளர் வானியலாளராக இருந்தார். ஆர்.ஓ.இ.யின் மேற்கு கோபுரம் பின்னணியில் உள்ளது.
1989 ஆம் ஆண்டில் எடின்பரோ ராயல் வான்காணகத்தில் பணியாளர் வானியலாளராக இருந்தார். ஆர்.ஓ.இ.யின் மேற்கு கோபுரம் பின்னணியில் உள்ளது.
பிறப்பு 27 மார்ச்சு 1956 (1956-03-27) (அகவை 68)
ஷாஃப்டெஸ்பரி, இங்கிலாந்து
துறைவானியற்பியல், அண்டவியல்
நிறுவனம்எடின்பரோ பல்கலைக்கழகம்
Alma materஇயேசு கல்லூரி,கேம்பிரிச்சு
துறை ஆலோசகர்மால்கம் லோங்கெய்ர்,
ஜே. வால்
அறியப்பட்டதுவிண்மீன் திரள்களின் பெரிய அளவிலான கட்டமைப்பு
பரிசுகள்எடின்பரோ ராயல் சொசைட்டியின் உறுப்பினர் (2006)
அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2007)
வானியலில் ஷா பரிசு (2014)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (2023)

ஜான் ஆந்திரூ பீகாக் FRS, FRSE (பிறப்பு 27 மார்ச் 1956) ஒரு பிரித்தானிய அண்டவியலாளரும் வானியலாளரும் ஆவார்.[1] 1இவர் 998 முதல் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார்.[2] இவர் 2014 ஆம் ஆண்டின் சா பரிசை இணைந்து வென்றவர்.[3]

இளமையும் கல்வியும்

[தொகு]

பீகாக் 27 மார்ச் 1956 அன்று இங்கிலாந்து தோர்செட்டில் உள்ள சாபிதெசுபரியில் இங்கிலாந்தில் ஆர்தர் பீகாக், ஐசோபெல் பீகாக் (நீ மோயிர்) ஆகியோருக்கு பிறந்தார்.[1][4] இவர் கேம்பிரிட்ஜ் இயேசு கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார். இவர் 1977 இல் முதல் வகுப்பு இளங்கலை கலை பட்டம் பெற்றார்.[1] பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவெண்டிசு ஆய்வகத்தில் எம். எசு. லாங்கேர், ஜே. வி. வால் ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[1] 1981 ஆம் ஆண்டில் " பால்வெளிக்கு அப்பாலான கதிரலை வாயில்களின் கதிரலைக் கதிர்நிரல்களும் அண்டவியல் படிமலர்ச்சியும் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே உள்ள ரேடியோ ஆதாரங்கள் " என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1982 ஆம் ஆண்டில் பீகாக் ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ கல்வியாளரான கீதர் என்பவரை மணந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.[6]

தகைமைகள்

[தொகு]

2006 ஆம் ஆண்டில் பீகாக் எடின்பர்கு அரசு கழகத்தின் பொறியியல் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 2007 ஆம் ஆண்டில் அவர் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 2014 ஆம் ஆண்டில் , வானியலுக்கான சா பரிசு ' பெரிய அளவிலான கட்டமைப்பில் உள்ள கூறுபாடுகளை அளவிடுவதில் அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது. அடர்துகள் ஒலி அலைவுகள், சிவப்புப் பெயர்ச்சிக் குலைவுகள் உள்ளிட்ட அண்டவியல் படிமத்தைக் கட்டுப்படுத்கிது பயன்படுத்தப்பட்டது. இப்பரிச டேனியல் ஐன்சுட்டைன், சான் கோல் ஆகியோரும் இவருடன் இணைந்து பெற்றனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Curriculum Vitae: John Andrew Peacock" (PDF). University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  2. "Biographical Notes of Laureates". The Shaw Prize Foundation. Archived from the original on 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  3. 3.0 3.1 "The Shaw Prize in Astronomy 2014". The Shaw Prize Foundation. 27 May 2014. Archived from the original on 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  4. "PEACOCK, Prof. John Andrew". Who's Who 2016. Oxford University Press. November 2015. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  5. Peacock, J. A. (1981). "The radio spectra and cosmological evolution of extragalactic radio sources". E-Thesis Online Service. The British Library. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  6. "Autobiography - John A Peacock". Shaw Laureates. The Shaw Prize. 24 September 2014. Archived from the original on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
  7. "Directory 2013/14" (PDF). Royal Society of Edinburgh. 2013. Archived from the original (PDF) on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  8. "Fellows". The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.

வார்ப்புரு:FRS 2007

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஏ._பீகாக்&oldid=3813613" இலிருந்து மீள்விக்கப்பட்டது