ஜாக் சிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாக் சிராக்
President Chirac (cropped).jpg
பிரெஞ்சு அதிபர்
பதவியில்
17 மே 1995 – 16 மே 2007
பிரதமர் அலைன் யுப்பெ
லியோனல் யோசுபின்
யான் பியரி ராஃபாரன்
டொமினிக் டெ வில்பின்
முன்னவர் பான்சுவா மித்தரண்ட்
பின்வந்தவர் நிக்கொலா சார்கோசி
அண்டோராவின் இணை இளவரசர்
பதவியில்
17 மே 1995 – 16 மே 2007
உடன் பணியாற்றுபவர் யோன் மார்ட்டி அலானிசு
யோன் என்ரிக் விவ் சிசிலியா
பிரதமர் மார்க் ஃபோர்னெ மொல்னெ
ஆல்பர்ட் பின்டட்
முன்னவர் பான்சுவா மித்தரண்ட்
பின்வந்தவர் நிக்கொலா சார்கோசி
பிரான்சின் பிரதமர்
பதவியில்
20 மார்ச்சு 1986 – 10 மே 1988
குடியரசுத் தலைவர் பான்சுவா மித்தரண்ட்
முன்னவர் லாரன்ட் ஃபாபியசு
பின்வந்தவர் மிசேல் ரோகர்ட்
பதவியில்
27 மே 1974 – 26 ஆகத்து 1976
குடியரசுத் தலைவர் வலேரி கிசுகர்ட் டி எசுடைங்
முன்னவர் பியரி மெசுமர்
பின்வந்தவர் ரேமண்ட் பாரே
பாரிசு மேயர்
பதவியில்
20 மார்ச்சு 1977 – 16 மே 1995
முன்னவர் புதிய உருவாக்கம்
பின்வந்தவர் யான் டிபெரி
உள்துறை அமைச்சர்
பதவியில்
27 பிப்ரவரி 1974 – 28 மே 1974
பிரதமர் பியரி மெசுமர்
முன்னவர் ரேமண்ட் மார்செல்லன்
பின்வந்தவர் மிசேல் பொனியாடௌசுகி
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 29, 1932(1932-11-29)
பாரிஸ், மூன்றாவது பிரெஞ்சுக் குடியரசு
இறப்பு 26 செப்டம்பர் 2019(2019-09-26) (அகவை 86)
பாரிசு, பிரான்சு
அரசியல் கட்சி மக்கள் இயக்க சங்கம் (2002–நடப்பு)
பிற அரசியல்
சார்புகள்
பிரெஞ்சு பொதுவுடமைக் கட்சி (1971 முன்னால்)
குடியரசின் மக்களாட்சியர் சங்கம் (1971–1976)
குடியரசுக்கானப் பேரணி (1976–2002)
வாழ்க்கை துணைவர்(கள்) பெர்னடெட் சிராக்
படித்த கல்வி நிறுவனங்கள் பாரிசு அரசறிவியல் கழகம்
ஆர்வர்ட் பல்கலைக்கழகம்
தேசிய மேலாண்மைப் பள்ளி
தொழில் பொதுச் சேவை
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்

யாக் ரெனே சிராக் (Jacques René Chirac, 29 நவம்பர் 1932 – 26 செப்டம்பர் 2019) 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக பணியாற்றிய ஓர் பிரெஞ்சு அரசியல்வாதி. இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டு முதல் 1976 வரையும் 1986ஆம் ஆண்டு முதல் 1988 வரையும் இருமுறை பிரான்சின் பிரதமராக இருந்த பெருமை உடையவர்.1977ஆம் ஆண்டு முதல் 1985 வரை பாரிசின் மேயராகப் பணியாற்றி உள்ளார்.

சிராக் பிரெஞ்சு அதிபராக, பான்சுவா மித்தரண்டிற்கு அடுத்து, மிகுந்த நாட்கள் பணியாற்றிய சாதனையும் புரிந்துள்ளார். முதல்முறை ஏழு ஆண்டுகளும் இரண்டாம் தவணையில் ஐந்து ஆண்டுகளும் முழு பணிக்காலமும் அதிபராக இருந்துள்ளார். அதிபர் என்ற முறையில் அண்டோராவின் பதவிவழி இணை-இளவரசராகவும் பிரெஞ்சு "தேசிய கௌரவ படை"(Légion d'honneur)யின் பதவிவழி கிராண்ட் மாஸ்டராகவும் பணியாற்றினார்.படித்தவுடன் மூன்று மாதங்கள் கப்பலில் மாலுமியாக பணியாற்றினார்.

சிராக் வரிவிகிதங்களைக் குறைத்தார்,விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார், குற்றம், தீவிரவாதம் புரிந்தவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார் மற்றும் வணிக தனியார்மயமாக்கலை ஆதரித்தார்.[1] சமூகத்திற்கு பொறுப்புள்ள பொருளியல் கொள்கைகளை ஆதரித்த இவர் 1995ஆம் ஆண்டு தேர்தலில் "சமூகப் பிளவை"(fracture sociale) குறைக்க வேண்டிய தேவையை எடுத்துக்கூறி வென்றார்.[2] இவரது அரசு கட்டுப்படுத்துகின்ற பொருளியல் வளர்ச்சிக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியரின் தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்ததைச் சுட்டி அதனை "ஆங்கிலோ-சாக்சன் பெருந்தாராளமயம்" என்றுரைத்தார்.[3]

சோவியத்துடன் உறவு[தொகு]

சோவியத் யூனியனுடான கொள்கையை பின்பற்றி ஸ்டாக்ஹொல்மை ஆதரித்து கையெழுத்திட்டார்.அதனால் அமெரிக்காவுடன் இவருக்கு பகை ஏற்பட்டது.அமெரிக்காவிற்கு விசாவிற்காக விண்ணபித்தபோது இவர் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்.

அமைச்சர்[தொகு]

1962 இல் , பிரதமர் பாம்பிடுவின் அமைச்சரவையில் அமைச்சராக சேர்ந்தார்.பாம்பிடு கூறும் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்கும் காரணத்தால் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.ஜனாதிபதியாக 1969 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது ஃப்ரான்சுக்கு எதிராக கொள்கையை வெளியிட்ட யூ.எஸ்.ஏ வை கடுமையாக சாடினார்.

கிங்கார்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது அவர் சிராக்கை பிரதமராக தேர்வு செய்ய வலியுறுத்தினார்.அவர் பிரதமராக இருந்தபோது ஃப்ரான்சில் குறைந்தபட்ச கூலி உயர்த்தப்பட்டது.

பிரதமர் ஒசிராக்[தொகு]

சிராக் பிரதமராக இருந்தபோது ஈராக்கின் ஜனாதிபதியான ஹுசைன் எராளமான எண்ணெய் வளங்களையும், ஆதரவையும் சிராக்கிற்கு வழங்கினார்.அதற்கு கைமாறாக சிராக்கும் ஈராக்கிற்கு அணூலை ஒன்றை வழங்கினார்.அந்த உலை 1981 இல் அழிக்கப்பட்டது.இதனால் இஸ்ரேல் பிரான்ஸின் கடுமையான கண்டனத்திற்கு உட்பட்டது.பிறகு அமெரிக்காவின் படையெடுப்பின் போது ஒசிராக் தொடர்பாக ஃப்ரான்ஸுக்கும் அமெரிக்காவிற்கும் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது.

லஞ்ச புகார்[தொகு]

2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்து பணியாற்றி ஓய்வுப் பெற்றார்.அவரின் மீது லஞ்ச புகார்கள் போடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

மறைவு[தொகு]

இதய கோளாறினால் அவதிப்பட்டு அறுவை செய்து கொண்டிருந்தார். முன்னாள் அரசுத்தலைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். சிராக் 2019 செப்டம்பர் 26 அன்று பாரிசில் உள்ள அவரது வீட்டில் காலமானார்[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Privatization Is Essential, Chirac Warns Socialists: Resisting Global Currents, France Sticks to Being French, International Herald Tribune
  2. "Jacques Chirac President of France from 1995–2007". Bonjourlafrance.net. 7 August 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. Giavazzi, Francesco; Alberto Alesina (2006). The Future of Europe: Reform Or Decline. பக். 125. 
  4. Clarity, James F.; Tagliabue, John (26 September 2019). "Jacques Chirac, French President Who Championed European Identity, Is Dead at 86". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/09/26/obituaries/jacques-chirac-dead.html. பார்த்த நாள்: 26 September 2019. 
  5. "Former French President Jacques Chirac dies at the age of 86". Oculus News.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜாக் சிராக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_சிராக்&oldid=3572976" இருந்து மீள்விக்கப்பட்டது